பக்கம் எண் :

 

இனவியல்

 
342களவினுங் கற்பினுங் கிளவி வகையாற்
றிணைநிலை திரியாச் செம்மைத் தாகி
நாட்டிய கலித்துறை நானூ றுரைப்பது
கோட்ட மில்லாக் கோவை யாகும்.
(171)
 

 

 
343ஐந்திணை தழுவிய வகநிலைக் கோவை
தந்தநா 1னூறுந் தாங்கலித் துறையே.
(172)
 

 

 
 

57-கணக்கு. (மேற்கணக்கு-கீழ்க்கணக்கு.)

 
344மேல்கீழ்க் கணக்கென 2விருவகைக் கணக்கே. (173)
 

 

 
345மேற்கணக் கெனவுங் கீழ்க்கணக் கெனவும்
பாற்படும் வகையாற் பகர்ந்தனர் கொளலே.
(174)
 

 

 
346அகவலுங் கலிப்பா வும்பரி பாடலும்
பதிற்றைந் தாதி பதிற்றைம்ப தீறா
மிகுத்துடன் றொகுப்பன மேற்கணக் கெனவும்
வெள்ளைத் தொகையு மவ்வகை யெண்பெறி
னெள்ளறு கீழ்க்கணக் கெனவுங் கொளலே.
(175)
 

 

 
347ஐம்பது முதலா வைந்நூ றீறா
வைவகைப் பாவும் பொருணெறி மரபிற்
றொகுக்கப் படுவது மேற்கணக் காகும்.
(176)
 

 

 
348அடிநிமிர் பில்லாச் செய்யுட் டொகுதி
யறம்பொரு ளின்ப மடுக்கி 3யவ்வத்
திறம்பட வுரைப்பது கீழ்க்கணக் காகும்.
(177)
 

 

 
 

58-தொடர்நிலைச்செய்யுள்.

 
349வித்தெண் டுளிகொடி தலைவனொடு மேவி
யொத்த வெள்ளை விருத்த மகவல்
வைத்த 4வொருதொடை கொச்சக வுறுப்பு
நடைபெற வருவது தொடர்நிலை யென்ப.
(178)

[பி-ம்.] 1 னூற தாங்கலித் துறையே. 2 விதித்தனர் புலவர். 3யவ்வகை. 4வுரைதொடை.