| | பன்னிருபாட்டியல். | | | 350 | 1வித்தே யெண்டுளி விருந்தியல் கொடியென வொத்த மூவகை யிறைவனொடு பொருந்தி யொழுகிய வெள்ளை விருத்த மகவ லுரையொடு மிடைந்த பாட்டுடைக் கொச்சக நடைபெற வருவது தொடர்நிலை வகையே. | (179) | | | | | | 351 | தொடர்நிலைச் செய்யுள் பாட்டுப்பல தொடுத்துத் தலையிடை கடையென நுவலவும் படுமே. | (180) | | | | | | 352 | அவற்றுள், தலையெனப் படுபவை மலைவின் றாகி யறம்பொரு ளின்பம் வீடென 2விவற்றின் றிறந்தெரி மரபி னீங்கா தாகி வென்றிகொ ளிருக்கை யென்றிவை யனைத்துஞ் சந்தி யாகத் தந்துநிலை பெறுமே. | (181) |
[பி-ம்.] 1 இதற்குமுன் சேர்த்துக்கொள்ளும்படி, ‘தொடர்நிலை யென்பது தமிழியற் பெயரே’ . (152) ‘கடவுள் வணக்க நாடூர் காவலர் மாப்புணர்ச் சிகொண் மகளிர் முடிசூடிடல் கற்றல் படைகுடி திறல்செல றூது செற்றோர் ,,,, ,,, ,,, ,,, ,,, ,,,,,,,,, ,,,,,,, ,,,,,,,,,, ,,,,,,,,, ,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,, ,,,,,,,,, ,,,,,,, ,,,,,தருதிறை கற்றோர்க் குதவல் கடல்புனல் வரவு கார்ப்பொழி லுண்டாட்டுத் தான மகப்பெறுதல் காலை மாலையென விருகதிர்க் கோளே யறுவகைக் காலமு மியைந்துட னுகர்த லெழிறரு வீடெனப் பகர்ந்தவும் பிறவுந் தொடர்நிலைப் பண்பே’. (153) ‘உரையிடை மிடைந்த பாட்டுடைச் செய்யுள் விரவிய மரபின் விளம்பிய நெறித்தே’. (154) ‘சருக்க நடையினு மிலம்பக முடிவினும் விருத்த நடையது வெற்றிசை யான’. (155) ‘வெண்பா நடையினும் பண்புற வருமே’. (156) ‘விதப்புக் கிளவி வேண்டியது விளைக்கும்’. (159) என ஆறு சூத்திரங்கள் தனியே எழுதப்பட்டுள்ளன. [ச-பி.] 2 விவற்றிற். |