| | இனவியல் | |
| | 59-பாட்டு. (பத்துப்பாட்டு.) | |
| 353 | நூறடிச் சிறுமை நூற்றுப்பத் தளவே 1யேறிய வடியி னீரைம் பாட்டுத் தொகுப்பது பத்துப் பாட்டெனப் படுமே. | (182) |
| | | |
| 354 | அதுவே: அகவலின் வருமென வறைகுநர் புலவர். | (183) |
| | | |
| | 60-கடைநிலை. | |
| 355 | கடைநிலை யென்பது காணுங் காலைப் பரிசி லுழப்புங் குரிசிலை முனிந்தோர் கடையகத் தியம்புங் காட்சித் தென்ப. | (184) |
| | | |
| 356 | பரிசினீட் டித்த லஞ்சி வெறுத்தோர் கடைநின் றுரைப்பது கடைநிலை யென்ப.2 | (185) |
| | | |
| | [கடையெனினும் அங்கதமெனினும் ஒக்கும்.] | |
| | | |
| | 61-கையறுநிலை. | |
| 357 | வலங்கெழு வேந்தர் 3வான்புகக் கவிஞர் கலங்கித் தொடுப்பது கையறு நிலையே. | (186) |
| | | |
| 358 | வெற்றி வேந்தன் விண்ணக மடைந்தபின் கற்றோ ருரைப்பது கையறு நிலையே. | (187) |
| | | |
| 359 | 4கலியொ டுவஞ்சியிற் கையற வுரையார். | (188) |
| | | |
| 360 | 5சொற்றன வல்ல வேறுபிற தோன்றினு மத்தகு 6மரபி னடக்கினர் கொளலே. | (189) |
| | | |
| | இனவியல் முற்றும். | |
| | பன்னிருபாட்டியல் முற்றிற்று. | |
என ஒரு சூத்திரம் தனியே எழுதப்பட்டுள்ளது. [ச-பி.] 3 வாழ்வுகக். 4 கலியே. 5 மற்றவை வல்ல வினம்பெரி தொன்றினு. 6 பாவி னடங்கின வென்ப.