பக்கம் எண் :

திரு அவதாரம்125

 

374.      வெற்றியே கொள்மின் பேய்களைத் துரத்தி யருளுவீர் விதவித சுகமே
              பற்றியே யரித்தே பாழ்செயும் பெருநோய்ப் படுபிணி பரிகரித் தருள்வீர்
              வெற்றியாய் மரணம் மேல்செய மடைந்தே மரித்தவர் களையெழுப் புவீரே
              பெற்றதி லவசம் பெறாதிரும் எதுவும் அருளுவீர் நலமில வசமாய்.

375.       கையினிற் பணமே வழிக்கவ சியமில் கனகுவெள் ளிசெம்புமாம் பணமும்
              பையிலப் பமுமே வழிக்கவ சியமில் இருபா தரட்சைவேண் டியதில
              பையிலங் கிகளே வழிக்கென விரண்டே அவசிய மிலைபல எதுவும்
              கையிலோர் தடியே பிடித்துமே பதத்தில் மிதியடி தொடுத்துமே செலுவீர்.

376.       பிரமா ணமிதே உணவுமே பெறவே பாத்திரன் வேலையா ளெவனும்
              பரமராச் சியத்தி் னூழியம் புரிவோர் பட்டணங் கிராமமுட் சொலும்போ
              தறங்கிளர் மகனாம் பாத்திர னெவனோ ஆர்வமாய்த் தங்குமவ் வகத்தில்
              புறப்படு மளவுந் தங்குவீ ரவணே வேறிடம் போகவேண் டியதில்.

377.       வீடுளே செலும்போ தந்தவீட் டையேநீர் விருப்பொடு வாழ்த்துவீர் நலமாய்
              வீடுபாத் திரமே யெனிற்கூ றுவதாம் நிம்மதி தங்குமங் குளோர்மேல்
              வீடபாத் திரமே யெனிற்கூ றுவதாம் நிம்மதி மீண்டுமே திரும்பும்
              வீடுவீ டுகளாய்ப் போகவேண் டியதில் அப்பதி நிர்விடு மளவும்.

378.       எங்குபட் டணமோ ஊருமே யவணோ யாரெனு மசட்டைசெய் வரெனில்
              உங்களை யுவப்போ டேற்கா துமேயும் வார்த்தையுங் கவனியா திருப்பின்
              அங்குபட் டணத்தை யந்தவூ ரையுமே நீரகன் றெழும்புமாந் தருணம்
              உங்கால் படிந்த தூசியை யவர்க்கே சாட்சியா யுதறியே விடுமின்.

379.       அந்தவூர் நகரோ அடையுமோ ரவதி நியாயத் தீர்ப்பிடுந் தினத்தில்
              நிந்தைகொள் கொமோரா சோதமென் பவைக்கே நேரிடுவ தோமிக லகுவே
              எந்தவி தமோயாம் எதுவிதம் நடக்கும் என்றெதுங் கவலைவேண் டியதில்
              எந்தவோர் குறையோ இடைஞ்சலுற் றிடினும் ஏதுமே பொறுமையாய்ச் சகிப்பீர.்