386. போதக னிலுமே யவனுட சிசியன் எவனுமே லானவ னிலையே மேதகை யெசமா னிலுமே லவனாய்ப் பணிவிடை யாளிருப் பதிலை போதக னைப்போல் சிசிசினா மெவனு மிருப்பதே போதும வனுக்கே மேதகை யெசமான் நிகர்த்திருப் பதுவே பணிவிடைக் காரனுக் கதிகம். 387. எவனுமோ ரெசமா னனைமற் றவரே பெயேல்செபூ லென்அழைத் திடிலோ அவனகத் தினரை யழைத்தலப் படியே யதிகநி சமாகுமே யறிவீர் அவர்களென் னைத்தான் பெயேல்செபூல் பிடித்தோன் எனஅழைத் தவமதித் தனரே அவர்களப் படியே யழைத்தலு மையுமே யதிகநி சமாகுமே யறிவீர். 388. அறிவியு மெவணும் பயப்படா தவர்க்கே யறிந்ததாம் நல்லசெய் தியையே அறியா திருக்கும் ரகசிய மிலையே வெளிவரா அந்தரங் கமுமில அறிவியு மொளியி லுமக்குயா னிருளிற் சொல்லுங் காரிய மெலாமே தெரிவியுந் தெளிவாய்க் கிரகமேல் முகட்டில் செவியினிற் கேட்கிற வனைத்தும். 389. அஞ்சவேண் டியதில் அற்பமாஞ் சடலம் மாத்திர மழிக்கவல் லவர்க்கே அஞ்சவேண் டியதில ஆத்தும மதனை கொல்லவே வலமையற் றவர்க்கே அஞ்சுவீ ருமது ஆத்துமஞ் சடலம ரண்டுமக் கினிக்கட லினிலே பஞ்சென வழியச் செய்யுமா சருவ வல்லவர் பரனொரு வருக்கே. 390. எங்குமீ ரடைக்க லானொரு காசாய் விற்கிறார் மிகச்சிறு வுயிரே உங்களின் பரம பிதாமன மிலையேல் ஒன்றெனுந் தரைவீழ் வதில்லை உங்களின் சிரசி லுள்ளரோ மமெலாம் கணக்கா னதேபயப் படாதீர் பங்கமே யிலைபல் லடைக்கலான் களில்நீர் பன்மடங் குயர்ந்தவ றறியும். 391. எவனொரு மனுடன் எனைமனு டரின்முன் னறிக்கைபண் ணுகிறவ னெனிலோ அவனையே யெனது பரமதந் தையர்முன் னறிக்கைபண் ணுவேனிது நிசமே எவனொரு மனுடன் எனைமனு டரின்முன் மறுதலிக் கிறவனே யெனிலோ அவனையே யசட்டை செய்குவே னிதுமெய் பிதாவின் முன்மறு தலிப்பேன் |