பக்கம் எண் :

திரு அவதாரம்127

 

392.      அகிலமா மிதின்மேல் சாந்தியே யனுப்ப வந்தவ னெனநினையீர்
              பகிர்ந்துமே கொடுக்க வந்துளேன் நிசமே பட்டயம் சமாதா னமல்ல
              மகன்தகப் பனொடும் தாய்மக ளொடுமே மாமிம றுகியொடும் பிரிவார்
              மகனொரு வனுக்குச் சத்ருவீட் டவரே யன்றிமற் றெவருமே யிலையே.

393.       என்னிலு மதிகம் தாய்தகப் பனின்மேல் நேசவா னெனக்கபாத் திரனே
              என்னிலு மதிகம் தன்மகன் மகள்மேல் நேசவா னெனக்கபாத் திரனே
              தன்குரு செடுத்தே பின்செலா னெனையே யன்னவ னெனக்கபாத் திரனே
              தன்னுயி ரிழப்போன் காப்பனே யுயிரைக் காப்பவன் தன்னுயிரி ழப்பான்.

394.       என்னையே யொருவ னேற்பனா குவனே யுமையவ னேற்பவ னெனிலோ
              என்னையே யொருவ னேற்பவ னெனையிங் கனுப்பிய வரையேற் பவனாம்
              நன்னய மொடுமே தரிசியென் பெயர்க்காய் நலமொடு தரிசியை யேற்போன்
              நன்மையாந் தரிசிக் கேற்றதாம் பலனை நலமிக நிச்சயம் பெறுவான்.

395.       நீதிமா னெனும்நன் னாமமென் பதற்காய் ஏற்பவன் நீதிமா னனையே
              நீதிமா னனுக்கே யேற்றதாம் பலனை நிச்சயம் பெற்றடை குவனே
              சேதிநிச் சயமே சீடனா னதினால் சிறியனுக் கேசலஞ் சிறிதே
              பேதியா தருள்வோன் பெற்றடை குவனே யேற்றதோர் பெரும்பலன் நலமாய்.

396.      பரன்குரு முடித்தே படர்ந்தனர் பலவூர் பட்டணம் செயப்போ தகமே
              புறப்படுஞ் சிசிய ரிருவரி ருவராய் போயின ரூர்களெங் கணுமே
              பரமராச் சியநல் விசேடமூம் பகர்ந்தே கடவிம னமாறவே யழைத்தார்
              துரத்தின ரலகை யளித்தனர் சுகமே பூசியெண் ணெயேசுகம் பிறர்க்கே.

57. அந்திப்பாவின் உட்கிடக்கை. மத். 14 : 1, 2; மாற். 6 : 14 - 16;
லூக். 9 : 7 - 9.

397.       நடந்தனர் பரனே திரிந்துநா டெவணும் நலமடைந் தனர்பல ரவரால்
              தடம்விரி பெரேயா கலீலிநா டெவணும் தடையிலா தவர்புகழ் விரிய
              படர்ந்த கீர்த்தியை யறிந்துமே பலபேர் பலபல விதம்பகர்ந் தனரே
              நடப்பவை யறித்தா னெரோதெனு மதிபன் நலிந்தவன் மனங்கலங் கினனே.