பக்கம் எண் :

128

 

398.      சிலர்சொல எலியா தோன்றின னெனவே சானுயிர்த் தனனெச் சிலபேர்
              சிலரொரு தரிசி யல்லதோர் பழைய தீர்க்கனு யிர்த்தன னெனவே
              பலத்தாங் கிரியை கேட்டவிவ் வரசன் இவ்விதம் பகர்ந்தனன் அறிவேன்
              சிலதின முனமே சிரமிழந் தவனாஞ் சானுயிர்த் தனனிது நிசமே.

399.      அற்புதப் பிறவி யற்புதம் புரிவோர் அற்புதப் போதகம் புகல்வோர்
              பொற்புறு கிருபைப் புண்ணிய ரிவரை காணவே பேரவா வடைந்தான்
              பொற்பரன் தமது நற்றரி சனமமே புல்லிய னுக்கரு ளவில்லை
              அற்பனோ ரசுத்தன் அன்புடன் விரும்ப அருட்டரி சனமடை குவனே.

 58, ஐயாயிரம் மக்களுக்கு உணவளித்தல்.

மத். 14 : 13 - 23; மாற். 6 : 30 - 46; லூக். 9 : 10 - 17; யோ. 6 : 1 - 15.

400.      திரும்பினார் சிசியர் பிரிந்துசென் றிருந்த திசைகளி லூழியம் நடத்தி
              திருக்குரு விடமே தெளிவுற வுரைத்தார் செய்ததாம் போதனை கிரியை
              தருணமே புசிக்கச் சமையமற் றவராய்த் திரள்சனம் வந்துபோ னதினால்
              அருட்குரு அவரை மறுகரைக் கழைத்தே கடந்தன ரவண்தனித் திருகசு.

401.      கடலினக் கரையி லிருக்கவே தனித்தே கருதியே போயினும் பரனே
              படவினி லமர்ந்தே சென்றதை யறிந்தே கரைவழி சென்றனர் பலபேர்
              தொடர்வதை யறிந்தோர் சூழ்ந்தபட் டணத்தார் தொடர்ந்தன ரிவரைப் பலபேர்
              நடந்துசென் றவரே யோடியு மடைந்தார் மறுகரை சேருமுன் குருவே.

402.      அக்கரை, யதோபெத் சாயிதாப் பதிக்கே யடுத்ததா மவாந்தர வெளியே
              இக்கரை யடைந்த யேசுநம் பரனே யெனயேற் றனர்பரி வொடுமே
              அக்கரை யொடுமே யங்குறு சனமோ அவர்செயு மதிசய மறிந்தே
              திக்கிலா தலைந்த ஆடுபோன் றிவர்மேல் திருக்குரு மனதுரு கினரே.

403.      ஆத்திர மொடுமே வந்தஅத் திரளுள் அவதியுற் றவர்பல பெயரே
              பார்த்திப னிவரைப் பார்த்துமே யிரங்கி பரிவொடுஞ் சுகமளித் தனரே
              நேத்திர மெனவே நேசமோ டிவர்க்கே நெடும்போ துபோதகம் புகன்றார்
              காத்திருந் தவரே கேட்டுமே யிருந்தார் கவனமா யருட்போ தகமே,