பக்கம் எண் :

திரு அவதாரம்129

 

404.       நேரமே யுணரா திதுதிரள் சனங்கள் இறைவனை நீங்கவே நினையார்
              நேரமா கியுமே யிரவுமே நெருங்க பிரசங் கமேகேட் டிருந்தார்
              நேரமா கவுமே நெருங்கியே யிருவர் நிமலனை வேண்டினர் பரிந்தே
              பேரவா வொடுமே பின்னிருப் பவரை யனுப்புவீர் பேர்மன முவந்தே.

405.       இவ்விடம் வனமே கடந்ததே பொழுதும் இவரிட எதுமுண விலையே
              எவ்விட மயலூர் கிராமமோ எதிலும் இவர்கொள தங்களுக் குணவே
              இவ்விதஞ் சொலவே யிறைவனோ இவர்க்கே கொடுப்பீ ருணவுநீ விரேதாம்
              எவ்விடங் கொளலா மிவர்களுக் குணவே பிலிப்புவே யுரைப்பாய் எனவே.

406.       எங்குபோய்க் கொளுவோம் மாதிரள் சனமே வேண்டிய அப்பமே யிவர்க்கே
              இங்கொரு வருக்குங் கொஞ்சமே கொடுக்கக் காணாதிருநூ றுபணம்
              உங்களி னிடமே யப்பமெத் தனையோ பாருமென் றுவந்துரைத் தனரே
              இங்கொரு சிறுவ னுண்டவ னிடமே அப்பமைந் திருடமீ னுமேதான்.

407.       இந்தமா திரளுக் இவைகளெப் படியாம் எனஅந் திரேயா வுரைத்தான்
              இந்தமீன் களையே யெனதிடங் கொணர்வீர் இந்தவைந் தப்பமுங் கொணர்வீர்
              பந்தியா மவர்த்தும் புல்மேல் சனத்தை பந்தியி லைம்பதைம் பதுபேர்
              அந்தவி தமேதா னமர்த்தினர் சிசியர் பந்தியி லமர்ந்தனர் மக்களே.

408.       அப்பமே யெடுத்தார் மீன்களை யெடுத்தார் வானமண் ணாந்துபார்த் தனரே
              அப்பமீன் களையா சீர்வதித் தனரே பிட்டுமே கொடுத்தவ ரிடமே
              இப்பொழு திவற்றை நீவிரே யெடுத்துப் பந்தியிற் பரிமா றுமென
              அப்படிச் சிசியர் வாங்கியே யவற்றை யவர்க்கே பரிமா றினரே.

409.       பிட்டவர் கொடுக்கச் சிசியரே பெரிது முவந்துப ரிமாறின ரவர்க்கே
              பிட்டுமே கொடுக்க வளர்ந்தன பெருகி அப்பமைந் தருமீன் களுமே.
              தட்டிய துளதோ தடையெது முளதோ சர்வவல் லவருட அருளால்
              பிட்டபோ துதிர்ந்த துணிக்கை பெருகி மாபெருங் குவியலாய்க் குவிந்தன.