410. வந்திருந் தவரே வளமிகப் புசித்தே திருப்தியே யடைந்தே மகிழ்ந்தார் ஐந்தப் பமிரு மீனிவை களினால் உண்டஅச் சனங்களின் தொகையோ விந்தையே யதுவைந் தாயிரம் பெயரே இத்திரி பிள்ளைகள் தவிர சிந்தியே குவிந்த துணிக்கை கனையே சேதமா காதுசேர்த் தெடுப்பீரே. 411. அத்துணிக் கைகளை யள்ளியே யெடுத்தார் ஆறிரு கூடைகள் நிறைய அத்துணை மகத்வ அற்புத மறிந்தே ஆச்சரி யமேயடைந் தனரே இத்தகைப் பெரியா ரிப்புவி வருவோர் என்றியாம் நோக்குவோர் நிசமே அத்துட னமையா தண்ணலைப் பிடித்தே அரசனே யாக்கவெண் ணினரே. 412. அத்தனோ இதனை யறிந்துமே விலகி யவணிருந் தகலவே கருதி பத்தமுள் ளவராந் திரள்சனங் களையே பரிவுட னனுப்பிவிட் டனரே பத்தராஞ் சிசியர் படவிலே றியுமே மறுகரை செலும்படி யனுப்பி சித்தமா யினரே தனிசெபஞ் செயவே மலையின் சிகரமே றினரே. 59. கடலின்மேல் நடத்தல்.மத். 14 : 24 - 33; மாற். 6 : 47 - 52; யோ. 6 : 16 - 21. 413. மங்கிய சமையம் நடுக்கட லடைந்தார் படவை வலித்துமே சிசியர் இங்கிவர் தனித்தே நெடும்பொழு திரவில் செபத்திலே தரித்துமே யிருக்க அங்கிதோ கடலி லெதிர்ப்புய லடிக்க அலைவுபட் டதேபட வலையால் பொங்கிய கடலிற் புலனிழந் தவர்போல் அலைந்துமே நலிந்தனர் சிசியர். 414. நான்குசா மவரை நடக்கட லினிலே வலித்துமே நலிந்தனர் சிசியர் ஆங்கமர் பரனே யவதியை யறிந்தே யவர்களுக் குதவியே புரிய நான்காஞ் சாமம் கடலிலே நடந்தே கடந்துசெல் பவராய் விளங்க ஆங்கவர் நடக்க அறிந்தராஞ் சிசியர் ஆவியே யெனப்பயந் தலற. 415. கலங்குசி சியரின் கலக்கமே தவிர்க்க விளித்தனர் காவல னவரை கலங்கா திருமின் கனதிகிற் கிடமில் திடன்கொளும் நான்தா னிவனே நலமொடு பரனே நவின்றதை யறிந்தே நவின்றனன் பேதுரென் சீடனும் நலமருள் பரனே அடியனுக் கருள்வீர் நவிலுமென் வேண்டலுக் கிரங்கி |