416. திடமொடும் பரனீர் பரவை நீர்மேல் நடப்பபோ லடியனுந் திடமாய் கடலின் நீர்மேல் நடந்தும திடமே கடக்கவே யருளுமென் றனனே கடலிலுமே நடந்தே கடந்துமே வருவாய் எனப்பரனும் கனிந்துமே சொலவே படவைவிட் டிறங்கி பரனிடஞ் செலவே பரவைமேல் நடந்துசென் றனனே. 417. காற்றுமே யடிக்க ஆழியிற் பலமாய் அஞ்சியே கடலினுள் ளமிழ ஆற்றலுள் ளவரே அண்டவா எனையே ரட்சியும் எனஅவ னலற சாற்றுதற் கரியதண் மைசால் பரனோ ஆவலாய் கரத்தினாற் பிடித்தே ஆற்றலில் லதவா அற்பவி சுவசியே ஏனவிசு வாசமே கொண்டாய்? 418. படவிலே பரனும் கேபா வுடனே பண்பொடு மேறினர் கணமே கடலலை தணிய காற்றுமே யமர ஆழிய மைந்தடங் கியதே படவிலுட் பலபேர் வந்தமே பணிந்தார் பரன்திரு மைந்தனென் றனரே அடக்கவே முடியா ஆச்சரி யமேகொண் டனரைந் தப்பமே யுணரார். 419. பரன்பட வமர படவுமே விரைந்தே பாய்ந்துசேர்ந் ததேகடற் கரையே கரையதோ செழிப்பாய்க் பலகனி கொடுக்கும் நாடதாங் கெனேசரேத் கரையே பரன்குரு சிசியர் பதினிரு வரொடும் சேர்ந்தனர் படவினின் றிறங்கி கரையினில் வசித்த சனங்களு மவரைக் காருணி யபரனென் றறிந்தார். 60. கடற்கரைத் திசையில் அற்புதங்கள்.மத் 14 : 34 - 36; மாற். 6 : 53 - 56. 420. கண்டவிச் சனங்கள் அக்கரை யெவணும் கண்டவி டமெலாந் திரிந்தே அண்டை யிலுளவாம் பட்ணமூர் களுக்கும் ஆட்களை விரைந்துமே யனுப்பி கண்டநோய் பிணியர் கட்டமுற் றவரை கட்டிலிற் கிடத்தியுஞ் சுமந்தும் தண்டுதண் டுகளாய்க் கொண்டுவந் தனரே தன்பர னருட்குரு விடமே |