421. அவருட வுடையி னோரமே யெனினும் தொடவனு மதிகேட் டனரே அவருட வுடையைத் தொட்டவ ரெவரும் அடைந்தனர் சுகம்பெல னுடனே அவர்செலு மிடங்க ளெங்குமே யுளராம் பலபல பிணியராஞ் சனங்கள் அவர்செலும் வழியிற் சந்தையி லிருந்தே சுகமடைந் தனருடை தொடவே. 422. இங்கருட் பரனே செல்லுமெவ் விடமோ இனிதுசெய் தனரிது விதமே அங்கெவ னுளராந் துன்பமுற் றவர்க்கே யதிமிகு நலங்களே யளித்தே எங்குமே யெவர்க்குங் கூறிவந் தனரே எழில்ராச் சியசுப விசேடம் தங்குமாந் தாமதூர் கபர்நகூ மெனுமத் தலமே யடைந்தனர் நலமாய் 423. திருக்குரு கரத்தா லப்பமே புசித்தோர் திருப்தியே யடைந்தவர் பலபேர் மறுதின மடைந்தா ராவலோ டவரிடம் மகத்துவ பரனைநா டியுமே இருந்தவோர் படவி லேறியே பகன்றார் தனிமையா யருட்பரன் சிசியர் அருட்குரு பரனோ செல்லவே யிலையே படவினி லெனவறிந் தனரே. 424. வந்தனர் அவணே வேறுப டவுகள் மறுகரை திபேரியா விருந்தே வந்தவா மவற்றி லேறியே சனங்கள் மறுகரை யடைந்தனர் மகிழ்ந்தே விந்தையே யிவர்கள் வேதனை தொடர்ந்தே விரைந்துமே யலைந்துமே திரிந்துமே எந்தஎவ் விடமோ இயேசுசென் றனரோ அவ்விட மெலாந்தொடர்ந் தனரே. 425. இறுதியி லடைந்தார் அக்கபர் நகூரூர் இறைவனைக் கண்டவர் மகிழ்ந்தார் அரட்குரு பரனை யண்டியே யவர்கள் அவாவொடு கேட்டன ரவரை அருளுரு ரபீயே பகருவீ ரவணின் றடைந்ததே எப்பொழு திவணே அருகுவந் தவர்க்கே யன்பராங் குருவே யரியதாம் போதகம் புகன்றார். 61. உயிர் அளிக்கும் அப்பம்.யோ. 6 : 26 - 71. 426. அற்புதங் களைநீர் கண்டவ ரதனாற் றேடுகின் றீரவா வொடுமே அப்பமே புசித்தீர் திருப்பியே யடைந்தீர் தேடுகி றீரெனை யதனால் அற்பமா மழிந்தே போகுமா முணவுக் காகவே செய்யீர் கிரியை பொற்புறு நிலையாஞ் சிவணே வரைக்கும் நிற்குமு ணவுக்கெனப் புரியும். |