பக்கம் எண் :

திரு அவதாரம்133

 

427.       ஆவியா மரிய போசனத் தைநீர் பெற்றடை யதோஅரி தறிவீர்
              ஆவியா லதையே தேடுவோ னெவனும் நிச்சய மடைகுவ னதனை
              மேவியே யருள்வார் மெய்மனு மகனே நிச்சய மடைகுவீ ரதனை
              தாவியே தரவே தெய்வதந் தையரே முத்திரித் திருக்குறா ரிவரை.

428.       ஈதிவர் மோழியக் கேட்டவிச் சளங்கள் விருப்போடுமே கேட்டன ரிவரை
              மேதினி யிவணே தெய்வமே யுவக்குங் கிரியைகள் மெய்யாய் நடத்த
              ஏதியா மிவணே செய்யவேண் டியதோ இனிதுறச் செப்புமென் றிசைந்தார்
              கோதிலாப் பரனே சற்குரு அவர்க்கே கொடுத்தன ரிம்மறு மொழியே.

429.       உலகினில் நலமே புரியவே யவர்தாம் உவந்துமே யனுப்பிய வரையே
              நலமுற விரும்பி விசுவிசிப் பதுவே கடவுளுக் குகந்தநற் கிரியை
              நலமுற வுமையாம் விசுவசிப் பதற்காய் எமதுந யனங்களா லறிய
              உலகினிற் புரியு மற்புத மெதுநீர் நடத்துவ தெதுவென் வுரையும்.

430.       வானஅப் பமதைப் புசித்தன ரதுநாள் வனத்திலே நமதுதந் தையரே
              வானஅப் பமுமே புசிக்கவே வளமாய்க் கொடுத்தன ரெனஎழு தியபோல்
              வானநின் றிருந்தே வந்தஅப் பமுமே கொடுத்ததில் லுமக்குமோ சையுமே
              வானிருந் திறங்கும் வரமுறு மப்பம் அருள்கிறார் பிதாவுமக் கருளாய்.

431.       நானுரைக் கிறேனே நலமொடிப் பொழுதே நிச்சய முமக்குநிச் சயமே
              வானிருந் திறங்கி யுலகினி லுளர்க்கே வான்சீ வனருளப் பமுள
              ஞானமா மிதுவே யெனதுதந் தையரே நல்குமோ ரப்பமு மிதுவே
              ஞானமுள் ளவரே நலமுற விதனை நாடிய டைவரே நிசமே.

432.       வேண்டினர் மக்களே வினையமா யவரை யரியவாக் கிதைக்கேட் கவுமே
              ஆண்டவா எமக்கே யருளுமெப் பொழுதும் அரியதா மப்பமே யிதனை
              ஆண்டவ ரவர்மேற் கருணைகொண் டவர்க்கே யரியதோர் போதனை புகன்றார்
              வேண்டினீர் நலமே விருப்பொடு முணர்வீர் இறங்கிவா னின்றுவந் ததுவே.