பக்கம் எண் :

134

 

433.      நித்யகா லமுமே நிலைக்கவே செயுமோர் உயிரப் பமேயா னறியும்
              சத்திய மிதுவே யெனதிடம் வருவோன் சதகா லமும்பசி யடையான்
              உத்தம மொடுமே யெனைவிசு வசிப்போன் ஓர்பொழு துமேபசி யடையான்
              உத்தம முளநல் லுணவிதை யடைய ஊக்கமாய் முயற்சிசெய் குவீரே.

434.      என்னைக் கண்டும் விசுவச மெனின்மேல் அற்றவர் நீரென விசைத்தேன்
              என்னிடம் வருமே பிதாவெனக் குவந்தே பண்பொடு அளிக்கிற வெலாமே
              என்னிடம் வருவோ னெவனையும் புறம்பே தள்ளுவ திலையெப் பொழுதும்
              என்னை யனுப்பிய பிதாவுட சித்தம் இயற்றவா னிருந்துவந் தவனே.

435.       எனதுசித் தமேயா னியற்றவே யிவணே வந்ததில் வானநின் றிருந்தே
              எனக்கவர் கொடுத்த எவற்றிலொன் றையுமே யென்றுமே யிழந்துபோய் விடாதே
              தினமோர் கடைசித் தினமெனு மதுநாள் சீரொடெ ழுப்பத லவற்றை
              இனமொடிவ் வுலகுக் கெனையனுப் பினரா மென்பிதாச் சித்தமே யறியும்.

436.       திருச்சுதன் பரனைக் கண்டுமே யவரைத் திடமொடு மவரென அறிந்தே
              திருவுரு வெனவே தீர்க்கவிசு வசமே யவரிடங் கொள்பவ னெவனோ
              ஒருவனே நித்ய சீவனுய் வதும்யான் எழுப்புவ துமவனைக் கடைநாள்
              கருணையா யெனையே யிங்கனுப் பியவென் பிதாவுட கருணையார் சித்தம்.

437.       வானிருந் திறங்கி வந்தஅப் பமிதோ நானென வுரைத்தார் லவரே
              ஞானமற் றவராம் நன்றியற் றவரே யூதரே முறுமுறுத் தனரே
              நாமறிந் துளேமே திட்டமா யிவனை யேசுயோ சேப்புட மகனே
              யாமறிந் துளேமே திட்டமா யவனின் தாய்பிதா வாமிரு வரையும்.

438.       இப்படி யிருக்க மானுட னொருவன் வானிருந் திறங்கினே னெனவே
              எப்படி யிசைப்பான் என்றவ ரிசைத்தே முறுமுறுத் திடறின ரிவரே
              அப்பனோ அவர்மே லன்புகூர்ந் தினுமே யருளுப தேசமே புகன்றார்
              இப்படி யெனின்மேல் நீர்முறு முறுத்தே யிடறவே யவசிய மிலையே.