550. இருமுனி வரரும் இறைவனை யகன்றே யேகும்போ துரைத்தனன் சிமியன் குருபரா நமக்கிங் கிருப்பதே குணமாம் மூன்றுகூ டாரமே சமைப்போம் ஒருவருக் குமொன்றாய் உமக்குமொன் றெனவே மோசெயெ லியாவுக் கிரண்டே இருப்போ மிவணெத் தினமுமென் றிசைப்ய தின்னதென். றறியா துரைத்தான். 551. இவனிது விதமே பேசியே யிருக்கும் பொழுதுமே கமொன்றுதோன் றியதே அவர்களின் சிரமே லிட்டதே நிழலே அவர்களைக் கவிந்துமூ டியதே அவர்களோ பயந்தா ரங்கது வரவே அதிலிருந் தெழுந்ததப் பொழுதில் இவரெனி னருமைப் புத்திர னிவர்க்கே செவிகொடும் எனஓரு தொனியே. 552. அத்தொனி தொனிக்க அதிர்ந்துமே சிசியர் அவனிமேற் குப்புற விழுந்தார் அச்சத் தினாலே அதுநிலை யிருந்தே யெழும்பவே லாதரா யினரே அச்சனாங் குருவே யவரிட மணுகி யவர்கனைத் தொட்டரன் போடுமே அச்சமே தவிர்ப்பீர் எழும்புமென் றிசைத்தே யளித்தன ராதர மவர்க்கே. 553. பயமே விடுத்தார் படுக்கைநின் றெழுந்தார் பார்த்தனர் திறந்துதம் விழிகள் வியப்பொடு திசைக ளெவணும்மே விழிக்க வேறெவ ருமேயிலை யவணே நயந்தரும் பரனே தனித்ததை யறிந்தே நலமொடு திடனடைந் தனரே தயைநிறை குருவே மலையினின் றிறங்க அவரைத் தொடர்ந்தன ரிவரும் 554. திருக்குரு பரனார் மலையினின் றிறங்கிச் சிசியரோடு மேவரும் பொழுதில் மரணத் திருந்தே மனுடமைந் தனுமே மகிமையா யெழும்புநாள் வரைக்கும் அருமை மகிமைத் தரிசன மிதனை யறிவியா திருப்பீ ரெவர்க்கும் கருணையார் பரனே கொடுத்தகட் டளையோ கடுத்தமே சிசியரா மிவர்க்கே. |