544. மனுமகன் தமது பிதாவினுன் னதமாம் மகிமை யடைந்துமே கடைசித் தினமதிற் றமது திரள்தூ தரொடுந் திவ்யம கிமையொடும் வருவார் இனமொடெல் லவரு மெழுந்துமே வருவார் அவர்முனா லிறைஞ்சிநிற் பரன்றோ குணமொடு மவர்க்கே கொடுப்பரே பலனை அவனவன் கிரியைகட் கிணையாய். 545. வருமொரு தினத்தில் மிகுவலு மையொடே மகிமையார் தெய்வராச் சியத்தில் வருவரத் தினத்தில் மனுடமைந் தனுமே மகிமையோ டுமேராச் சியத்தில் அறிமின் னிதனை யதுதினம் வருமுன் னிதுபொழு திவணுள சிலபேர் மரிப்பது மிலையே யுரைக்கிறே னுமக்கே மாறா தேநிசம் நிசமே. 72. மறுரூபமடைதல்.மத். 17 : 1 - 13; மாற். 9 : 2 - 13; லூக். 9 : 28 - 36. 546. திருமக னிவற்றைச் சீடருக் குரைத்தே ஏழல தெட்டுநாட் கழித்தே திருமகன் மகிமை யெத்தகைத் தெனவே சீடரிற் சிலரறி லதற்காய் திருவுள முவந்தே மூன்றுசி சியராம் பீற்றர ருளன்யாக் கபொடும் அருட்குரு உயர்ந்த ஓர்மலை யதன்மேல் சேர்ந்தனர் தனிச்செபஞ் செய்வே. 547. அவர்செபஞ் செயும்போ தேயவ ருருவம் சீருடன் மறுரூ படைய அவர்திரு வதனம் ஆதவ னொனிபோல் சொலிக்குமோ ரொளியென இலங்க அவர்திரு வுடையோ வானிருந் திறங்கும் அதிவெளுப் புறைமழை நிகர எவருமே சலவை செய்யவே முடியா எழில்மிகும் வெளுப்புமா யினதே. 548. முன்தமக் கிருந்த மகிமை தரித்த முன்னவ னொடுபே சவுமே முன்மறைந் தவசீர யுலகினி லிருந்தே மோசே யெலியா இருவர் விண்ணிணுக் குரிய மகிமை விளங்க வானிருந் துவந்தவ ரொடுமே பின்னெரு சலையில் நிகழ்துயர் மரண மாமிவை பேசியே யிருந்தார். 549. இங்கிவை நிகழ இருந்தமுச் சிசியர் இருந்தனர் நித்திரை மயக்காய் அங்கவை முடிந்தே யிருவரா முனிவர் அகல்வதின் முன்னவர் விழித்தே பொங்கியே யொளிரும் புனிதனின் மகிமை புலர்வது கண்டதி சயித்தார் அங்கிரு முனிவர் அடைந்தார் மகிமை யதனையுங் கண்டதி சயித்தார். |