பக்கம் எண் :

150

 

538.       என்தனின் சீட னோநீ எனக்கிட றேயா னாயே
              என்தனை யகன்றே போவாய் எனதுபின் போசாத் தானே
              சிந்தனை செய்கின் றாயே தேவனுக் கேற்கர வற்றை
              சிந்தனை செய்கின் றாயே மனுடருக் கேற்றவைதான்.

539.       இப்படிக் கண்டித் தேபின் னழைத்தன ரேனை யோரை
              எப்படிப் பட்டோன் சீடன் எதுவிதந் தம்பின் செல்வான்
              எப்படி யாமன் போகம் இவனுக் குண்டா மென்றும்
              அப்பனு வந்தன் னோர்க்கே யருளினார் தெளிவா யீதே.

71. சீடன் யாவன்? சிலுவை சுமப்போனே!
மத். 16 : 24 - 28; மாற். 8 : 34; 9 : 1; லூக் 9 : 23 - 27.

வேறு 

540.       எவனுமே யொருவன் எனதுசி சியனா யெனதுபின் வரவிரும் பினனோ
              அவன்தனை யொறுத்தே தனக்குள அனைத்தும் தனையுமர்ப் பணமெனப் படைத்தே
              அவனனு தினமூம் சிலுவை யெடுத்தே யவாவொடு மெனதுபின் செலுக
              எவனுமவ் விதமே செயமன மிலனோ அவனென் சீடனா வதிலை.

541.       தன்னுயி ரினைத்தான் காக்கவே விரும்பும் தற்பிரி யனெவனோ ஒருவன்
              தன்னுயிர் பிழைக்க எதுசெய முடியும் தன்னுயி ரிழப்பனே நிசமே
              என்னிமித் தமேநல் விசேடமே யதற்காய் தன்னுயி ரிழக்கவே துணிவோன்
              தன்னுயி ரினையே யிழப்பதே யிலையே ரட்சைசெய் குவன்தன துயிரை

542.       நீளுல கனைத்தும் லாபமாய்த் தனக்கே நின்றுமே தனதுசீ வனையே
              பாழுறக் கெடுத்தே நட்டமாக் குவனோ லாபம வனுக்கெனப் பகர்வீர்
              ஆளவன் கொடுக்க யாதொரு பொருளை யாகுமோ பதில்சீ வனுக்காய்
              நாளிதி லுமது சீவனே பிழைக்க நாடியே தேடுமித் தினமே.

543.       நிந்தனைக் குரிய இழிகெடு பவமே நிறைந்தவிப் புல்யசந் ததியில்
              எந்தவோர் மனுடன் எனைக்குறித் தெனது வசனமுங் குறித்துவெட் கடைந்தால்
              அந்தமா னுடனின் முடிவுநிர்ப் பந்தம் அவமென வாகுமிப் புவியில்
              அந்தமாந் தினத்தில் மனுமகன் வரும்போ தவனையே குறித்துவெட் கடைவார்.