பக்கம் எண் :

திரு அவதாரம்149

 

531.       இன்னுமே சொல்கின் றேனே யினிதுறக் கேட்பா யேநீ
              மன்னுமா கேபா வானாய் வகுப்பே னிக்கன் மேலே
              என்சபை யைத்திட் டந்தான் எதுமசைக் காதே யீதை
              என்றுமேற் கொள்வ தில்லை பாதல வாசல் லீதை.

532.       பரமராச் சியத்தை யேதான் பண்பொடு திறக்க வல்ல
              திறவுகோல் களையீய் வேனே திண்ணமே யுனக்குத் தானே
              நரவுல கிதில்நன் றாயே நீபிணிப் பதுவும் யாதோ
              பரவுல கதிலுந் தானே கட்டியே யிருக்கும் பண்பாய்.

533.       நரவுல கிதில்நன் றாயே யவிழ்ப்பவை ஏதும் நன்றாய்
              பரவுல கதிலுந் தானே யவிழ்ந்துமே யிருக்கும் பண்பாய்
              நரரெனு மெவர்க்கு மீதை நவிலா திருப்பீ ராக
              கிருபையா யுலகில் வந்த கிறித்துவா மியேசே யென்றே.

70. பாடு மரண முன்னறிவிப்பு.
மத். 16 : 21 - 23; மாற். 8 : 31 - 33; லூக். 9 : 22.

534.       உன்னத ரகத்ய மீதை யுரைத்தபின் தஞ்சி டர்தாம்
              பின்னதாய் நிகழு மாபேர் நிகழ்ச்சியைக் காணும் போதில்
              பன்னிரு பேராஞ் சீடர்பயந்திட றாதே காக்க
              முன்னதா யவர்க்குக் காட்ட முயன்றனர் முன்னோன் தாமே.

535.       பார்ப்பீர் மனுமைந் தன்தாம் பதியெரு சாலேஞ் சேர்ந்தே
              மூப்பர் பெரியாச் சார்யர் முதுமறைப் பாரர் தம்மால்
              தீழ்ப்பாய்த் தள்ளப் பட்டே யடைகுவர் தீங்கே பாடே
              பார்ப்பீர் மனுட மைந்தன் படுகொலை யாக வேதான்.

536.       மனுமகன் மாண்டா ரென்றால் மறைந்துமே யொழிந்தே போகார்
              தினமா மூன்றாம் நாளில் திறமிக மரணம் வென்றே
              அணுவெனுந் தப்பிப் போகா தவருயிர் தெழுவார் மெய்யே
              இனமொடிவ் வுண்மை யேயும் மிருதயத் திற்கொள் வீரே.

537.       இதுவுரை கேட்டே பீற்றர் தனிமையா யழைத்தே யேசை
              இதுஒரு போதும் நேரா எனதுட இறைவா ஆண்டாய்
              இதுநட வாதே மெய்யாய் இறைவனே யுமக்கென் றானே
              இதுசெவி யுற்றே நாதன் இயம்பின ரீதே வார்த்தை.