99. எவனோர் மகனுமே கடவுளின் பக்தனா யிருந்தே அவரின் திருவுளப் படியியற் றுபவனா யினனோ அவனுக் கருளொடு மவர்செவி கொடுப்பது நிசமே எவறும் மறுக்கொணா சிறந்ததா மெழில்சத் தியமே. 100. பிறவிக் குருடனாய்ப் பிறந்தவன் கண்களை யெவனும் திறந்த துளதென செகமிது தோன்றுநாள் முதலே நரனா மெவனுமே கேட்டதுண் டோவென நவில்வீர் பரனி டமிருந் தவர்பண் பாய்வரா திருந்தால். 101. ஏது மியற்றவே முடியா தவர்க்கென விசைத்தான் ஈதே மறுமொழி யிசைக்கவே யவர்களோ முனிந்தார் ஏது முழுவதும் பவத்தினிற் செனித்தநீ யெமக்கோ போதிக் கிறதோ எனவுரைத் தகற்றினர் புறம்பே. 102. புறம்பே தள்ளின தறிந்தனர் புண்ணிய புருடன் பரன்கு ருதாமே மறுதரம் பார்த்தபோ தவனை பரன்கு மாரனை பரிவொடும் விசுவசிக் கிறாயோ நரனா மைந்தனை நலமுற நம்புகின் றனையோ. 103. ஆண்டாய் விசுவசம் நலமுற வைக்கவே யவர்மேல் வேண்டு மறிவெனக் கெவரவ ரோவென வினவ காண்டா யுனதிடம் கனிவொடு பேசுவோ ரவரே ஆண்டாய் விசுவசிக் கிறேனென அறைந்தவன் பனிந்தான். 104. காணக் கண்ணிலா ரானவர் காண்பதற் கெனவே காணக் கண்ணுளோர் காணா ராவதற் கெனவே காண நியாயத் தீர்ப்பினுக் காயுல குற்றேன் காணாக் குருடரோ கண்னுள யாங்களும்? எனவே, 105. காணக் கூடாக் கண்ணில ராயிருந் தீரேல் கோணப் பாவமாங் குற்றமு மெயிலா திருப்பீர் காணக் கண்ணுளேங் காண்கிறே மென்றுரைக் கிறீர்நீர் நீணாட் காலமாய் நிற்கிற தேயுமின் பவமே. |