82. நானே நல்ல மேய்ப்பன். யோ. 10 : 1 - 21 106. ஆட்டைத் தேடியே வந்தவோ ராயனு ரைத்தார் சாற்று கின்றேன் சத்திய மாயுங் களுக்கே ஆட்டுத் தொழுமுன் னதன்வா சல்வழி செலாதே வேற்று மார்க்கமா யேறுவோன் வேற்றாள் திருடன். 107. வாசல் மார்க்கமுட் செல்லுவோன் மறிகளின் மேய்ப்பன் வாசற் காவலன் திறப்பனே வாசலே யதற்கே நேச மாய்மறி யவன்தொனி கேட்குமே நிசமாய் மோச மிலையென முழுவதும் நம்புமே யவனை. 108. ஆடு சொந்தனே பெயர்சொலி யழைப்பனே யவற்றை ஆடு களையவன் நடத்தியே செலுவான் வெளியே ஆடு கள்வெளி வரஅவன் நடப்பா னவைமுன் ஆடு செல்லுமே யவன்பின் னறிந்தவன் தொனியே. 109. அந்நி யர்களின் தொனியையே யறியா ததனால் அந்நி யன்பினால் நடவா தவனைவிட் டோடும் முன்ன வன்பரன் மொழிந்தவிவ் வுரையின் பொருளை இன்ன தென்றவ ரறிந்திலர் யூதரங் கிருந்தோர். 110. ஆத லின்பரன் மறுதர மவர்களை விளித்தே போத வேயினும் புகல்கிறே னிதுநிச நிசமே ஆத ரம்மெனுந் திறப்பே யான்மறி களுக்கே பேத மில்லிதே பெரியதோர் விடயம் நிசமாய். 111. எனக்கு முன்வந் தோரெலாம் திருடரா னவரே பிணக்க மிலையே பெரிதுமே கொள்ளை யாட்களே இணங்க விலையே யிவர்கள ழைப்பை மறிகள் இணக்க மாயவை செவிகொடுக் கவேயிலை யிவர்க்கே. 112. உட்செல் வதற்கா யுறியதோர் வாசலென் வழியாய் உட்செல் லுவோனே யுனதரட் சிப்படை குவனே உள்ளும் புறம்புமே உவந்தநல் மேய்ச்சலு மடைவான் உட்செல் லுவீரே உரியதோர் வாசலவ் வழியாய். |