பக்கம் எண் :

திரு அவதாரம்181

 

113.       திருடன் வருகிறான் திருடவு மழிக்கவுங் கொலவும்
              வருகின் றதேயிலைப் பிறிதொரு நலமுமே விளங்க
              விரும்பி வருகிறே னவைகளே சீவனை யடைய
              மருவி லாதவை உன்னத பூரண மடைய.

114.       நல்ல மேய்ப்பனே யாரென நவில்கிறே னுமக்கே
              நல்ல மேய்ப்பனோ நானலாற் பிறிதெவ னுளனோ
              நல்ல மேய்ப்பனோ ஆடுகள் நலம்விரும் புவனே
              நல்ல மேய்ப்பனோ நல்குவன் தனதுசீ வனையே

115.       கூலி யாளெனும் மேய்ப்பனில் லான்குண மிலனோ
              போலி புத்தியில் லாடுகள் சொந்தமில் லானே
              காலி யாய்விட் டோடுவன் கண்டோ நாயே
              மேலே வீழ்ந்துமே பீறுமே வெருட்டியா டுகளை

116.       கூலி யாட்பணி செய்வதோ கூலியே பெறவே
              போலி யேயவன் வேலையிற் புண்ணிய மிலையே
              காலி யாகவிட் டோடுவன் கடிதிலா தலினால்
              கால மென்றுமே கொள்ளுவ திலைகவல் அவனே.

117.       நானல் மேய்ப்பனே நற்பிதா எனையறிந் ததுபோல்
              நான்பி தாவை நலமொடு மறிந்தும் உளனே
              நானே யன்னவை யறிந்திருக் கிறேன்நல மொடுமே
              நானு மவைகளா லறியப் பட்டுளேன் நலமாய்

118.       என்தன் மறிகளுக் காய்த்தரு கிறேனென் னுயிரே
              இந்தத் தொழுவமே யுள்ளவிம் மறிகளுந் தவிர
              எந்த விடத்திலும் வேறும றிகளுள வெனக்கே
              அந்த மறிகளை யன்பொடு கொணர்வது மவத்யம்.

119.       அவைக ளென்தொனி யன்பொடு கேட்டிணங் கியுமே
              அவைக ளென்பினால் வந்திது மந்தையி லமரும்
              அவையி வற்றொடு மொன்றுசேர்ந் தேயமர்ந் திடிலோ
              அவையெல் லாமொரே மந்தை மேய்ப்பனும் ஒன்றே.