120. நானென் சீவனை நல்கிறேன் மறுதர மெடுக்க ஆன தாற்பிதா அன்புகொண் டிருக்கிறா ரெனின்மேல் ஆன திலையே யாருமே யதனை யெடுக்கவே நானென் சீவனை நல்கிறேன் முழுமன தொடுமே. 121. அஃதைக் கொடுக்கவே யதிகா ரமுமெனக் குளதே அஃதை யெடுக்கவு மதிகா ரமுண்டே திரும்ப இஃதை யடைந்துளேன் என்பிதா தரஅதி காரம் இஃதே யுரைகளா லெழும்பின பிரிவினை யவர்க்குள். 122. இவைகள் கேட்டுமே யிசலின ரிவைகளைக் குறித்தே இவர்க ளிற்பலர் இடறினர் பரனையே குறித்தே இவன்பி சாசுகொண் டவனினு மொருபைத் தியனே இவனுக் கேன்செவி கொடுக்கிறீர் எனவிசைத் தனரே. 123. இவர்கள் சொன்னதைக் கேட்டவர் சிலரெதிர் மொழியாய் இவைபி சாசுமே கொண்டவன் வசனமோ இலையே இவரோ அந்தகன் கண்களைத் திறந்தது மிலையோ இவரே செய்தபோற் பிசாசுகள் திறக்குமோ என்றார். 124. திருநாட் செல்லவே திரள்சனந் திருப்பதி விடுத்தார் எருச லேம்நகர் தனதியல் நிலைமையி லமர திருந கரினில் அயலுள பதிகளிற் றிரிந்தே திருக்கு மாரனே நடத்தினர் திடமொடூ ழியமே. 83. திருவிழாவில் போதனை. யோ. 10 : 12 - 24. 125. அந்தி யோக்கினில் நூறிரு ஆண்டுமுன் னுளனாம் அந்தி யோக்கெபிப் பானியு அரசனே தனது சிந்தை தனிலே தேவனுக் கெதிரகங் கரித்தே அந்த மார்திரு ஆலய மசுசிசெய் தனனே. 126. சிந்தி யூதரி னுதிரமே திசையெலா மெவணும் உந்தி வந்தெதிர்த் தனபடை களைமுனி தவனே கொன்றன் பலரைப் பிடித்தனன் பதியெரு சலேமே வென்றி யாய்நிறுத் தினன்சியஸ் சிலையைக் கோயிலில் |