127. இந்தப் பாதகம் மத்தியர் மனங்கொளா தெழும்ப அந்தப் பக்தனின் மக்களை வருமெழும் பினரே நிந்தை கண்டநிர்ப் பந்தரோ எழும்பினர் பலபேர் நிந்தை நீக்கவே நேயமாய்ச் சேர்ந்தனர் பலபேர். 128. பக்த சேனைய ரிவர்பல சங்கட மடைந்தும் பக்தர்க் காதர மருள்பரன் வல்லவ ரருளால் மெத்த வீரமா யெதிர்த்துமேற் கொண்டுதீ மையே சுத்தஞ் செய்தனர் சுயம்தபுவி னாலயப் பதியை. 129. ஆண்டவ் வாலயத் துளவா மசுத்தங் களைந்தே வேண்டுஞ் சுத்திக ரிப்புபல் வினையெலா முடித்தே ஆண்டு கி-பி முன் நூற்றிய றுபதுநான் கினிலே ஆண்டு பண்டிகை யார்வமாய்த் துவக்கினன் இயூதா. 130. இந்தப் பண்டிகை வந்தது பின்னிரு திங்கள் அந்தக் காலமோ மார்கழி மாதவா ரம்பம் வந்து லாவினர் வான்குரு ஓர்மண் டபத்தில் அந்த மண்டபம் சாலமோன் மண்ட மாமே. 131. வந்தார் யூதரே வந்துமே சூழ்ந்துநின் றனரே எந்த மட்டுநீர் எங்களி னாத்துமங் களுக்கே சந்தே கமேயுண் டாக்குவீர் சாற்றுவீர் தெளிவாய் அந்த மாருயர் கிறித்துவோ நீவிரென் றறைந்தார். 132. உங்கட் குறைத்தேன் நீரென் னுரைநம் பவிலை எங்கும் நிறைந்தவ ரென்பிதா நாமமா மதனால் எங்கு மிதமுற யான்செயுங் கிரியை யனைத்தும் பங்க மெதுமிலாச் சாட்சியே பகர்கிற வெனக்கே. 133. ஆனா லும்மெனின் மறிகளே யலநீ ரதனால் ஆன தாலுமக் கியான்சொன படிநம் பவிலை கோனா ரென்தனின் மறிகளோ செவிகொடுக் கிறதே யானே வற்றை யறிந்திருக் கிறேன்மிக நலமாய். |