134. அவைக ளென்பினாற் செல்கிற அதியுவப் பொடுமே அவைக ளுக்கியா னருள்கிறே னனந்தசீ வனுமே அவைக ளென்றுமே தவறியே யழிவது மிலையே எவனு மென்கர மிருந்தவை பறிப்பது மிலையே 135. என்பி தாப்பர னளித்தன ரவற்றை யெனக்கே என்பி தாப்பர னெவரிலும் பெரியவர் நிசமே என்பி தாக்கர மிருந்தெவன் பறிக்கவே முடியா என்பி தாவொடு மிணைந்திருக் கிறேனொன் றாயோ. 136. இப்ப டியவர் சொல்லயூ தரோஎழும் பினரே அப்ப னுக்கெதிர் கொக்கரித் தெழும்பின ரவரே அப்ப னவரை யேகொன் றிடத்துணிந் தனரே அப்பி யெடுத்தனர் கற்களை யவர்மே லெறிய. 137. இக்க ணம்வரை எனதுதந் தையருட அருளால் அக்க ரையொடே காட்டினே னருள்நலங் கிரியை இக்ரீ யைகளி லெதற்கென எனைக்கலா லெறிய உக்கி ரங்கொள இசைந்ததோ உறையுமென் றனரே. 138. கல்லைக் கொண்டனங் கரங்களி லியற்றிய எதுவோ நல்ல க்ரியையின் நிமித்தமா யெறியநாங் களுன்மேல் அல்ல நீயொரு அசுத்தனா மனுடனா யிருந்தும். எல்லை யேயிலாக் கடவுளே யெனச்சொலி யுனையே. 139. தெய்வ தூடணஞ் செப்பினா யதனிமித் தமேயாம் மெ்ய்யே யுனின்மேற் கற்களை யெறியவே நிசமாய் செய்யா தேசெயு மூடனோ முடிவடை குவனே பொய்ய னானநீ பொன்றியே யொழிவை யென்றனர். 140. தேவ ராயிருக் கிறீரெனச் செப்பினேன் எனவே தேவ வாக்குமே சிறப்பொடு செப்பின துளதே தேவ வாக்கைப் பெற்றராஞ் சீரியர் தமையே தேவ ரென்றுமே திருப்பரன் செப்பியே யிருக்க. |