பக்கம் எண் :

திரு அவதாரம்189

 

169.       அப்பனே கேளுனக் குரைப்பதையே வானிலுலவுபற வைகட்கே
              தப்பில தாயுள கூடுகளே இத்தரை குழியுள நரிகளுக்கே
              அப்பனே யறிகுவை மனுமகற்கோ இல்லையே யெதுமேத யிப்புவியில்
              எப்பொழு துமேயவர்க் கிடமிலையே சாய்க்கவே யவர்தலை யனவுரைத்தார்.

170.       இன்னொரு மனுடனை விளித்தவரே என்தனைத் தொடர்வாய் எனவழைத்தார்
              இன்னவன் இம்மறு மொழியிசைத்தான் ஆண்டவா அதன்முனா லகன்றேயான்
              என்னுட தகப்பனை யடக்கஞ்செய என்தனுக் கருள்வீர் விடையென்றான்
              மன்னவ னிப்பதிற் கிணங்காதே மறுமொழி யருளினார் மறுதரமும்.

171.       மரணமுள் ளானவர் மானுடர்தம் மரித்தரை யடக்கஞ் செயவிடுவாய்
              பரமனின் ராச்சிய சுவிசேடம் பரிந்தறி விப்பாய் என்பின்வா
              நரரெனுஞ் சீடருக் கிக்கடமை நலமொடு பொறுத்துள தவர்களையே
              பரமனின் ராச்சிய சுவிசேடம் பரிவொடு பிரசுரஞ் செயவேண்டும்.

172.       பிறிதொரு மனுடனும் வந்தவணே பெரியவர் குருவிட மூறைத்தனனே
              பிரியா துமையான் பின்தொடர்வேன் அதன்முனாற் பிரிந்தென தகஞ்செலுவேன்
              பெறுவனே விடையவ ணுள்ளவெனின் பெரியரா மகத்தின ரிடமிருந்தே
              பிரிந்தியான் வருகிறே னேயதன்பின் விடையெனக் கருள்வீ ரெனவுரைத்தான்.

173.       நலமொடு விளித்தன ரம்மகனை நவின்றனர் நாதனே பரிவொடுமே
              கலப்பை மேல்கை வைத்தெவனும் திரும்பியே பார்ப்பவ னெவனெனிலும்
              உலகினா லிழுபடு வான்கெடுவான் உயர்பரன் ராச்சியத் திடம்பெறானே,
              உலகமும் பரமுமோ ஒவ்வுவதில் உனதமா மொன்றைப் பிடிநலமாய்.

86. எழுபதுசீடர் திரும்பினது. மத். 11 : 25 - 30; லூக். 10 : 17 - 24.

174.       திருக்குரு எவணுமே திரிந்தலைந்தே தம்முட ஊழியஞ் செய்துவரவே
              திரும்பின ரெழுபது சிசியருமே செய்துமு டித்தே தம்மூழியம்
              திரும்பின ரதிமிகக் களிப்பொடுமே திருப்திய டைந்துதம் மூழியத்தில்
              திரும்பின ரிருவரா யிருவராயே செய்யவே யூழிய அறிக்கையுமே.