பக்கம் எண் :

188

 

162.       உமக்குச் செவிகொடுத் தும்மை யேற்பவ னெவனோ
              எமக்குச் செவிகொடுத் தெம்மை யேற்பவ னவனே
              உமக்குச் செவிகொடுத் தேற்கா தவனா மெவனோ
              எமக்குச் செவிகொடுத் தேற்கா தவனா குவனே.

163.       என்னை யசட்டை செய்தேற் காதவ னொருவன்
              என்னை யனுப்பிய அண்ணலை யசட்டை செய்தவன்
              இன்ன விதஞ்சொலி எழுபது சிசியறை யனுப்பி
              பின்ன ரவர்பிரிந் தியற்றினா ரூழியந் திரிந்தே.

85. சமாரியர் ஏற்றுக்கொள்ளாமை-சீடராக விரும்பிய மூவர்.
மத். 8 : 19 - 22; லூக். 9 : 51 - 62.

வேறு 

164.       உன்னதக் குருபரன் பலநகர்கள் அநேகவூர் களுந்திரிந் தெவணெ வணும்
              நன்னய மொடுதிருச் சுபவிசேடம் நவின்றுமே யருளினர் சுகம் பலர்க்கே
              உன்னத மெடுபடுந் தினம்நெருங்க நடத்தியே யூழியம் மிகவுவப் பாயே
              மன்னவ னெருசலேம் பதிமுகமாய் நடந்தனர் திடமொடு சிசிய ரொடே.

165.       தமதுட வூழியந் தடையிலாதே நடக்கவே தாஞ்செலு மிடமெவணும்
              தமக்கென இடஞ்சரி செயும்படியே வசதியே தங்கவே செயவெனவே
              தமதுமுன் னாற்சில தூதரையே யனுப்பியே தாம்பினால் வரவிவர்கள்
              சமரியா ஒருவூர் சேர்ந்தனரே தரிப்பதற் காமிடஞ் சரிசெயவே.

166.       திருக்குரு எருசலேம் பதிமுகமாய்ச் செல்கிற நோக்கமே கொண்டதினால்
              குருபர னையேயவ ரேற்பதற்கே கொஞ்சமும் மனமிலா தேயிருந்தார்
              எரிச்சலே யடைந்தன ரிதையறிந்தே யாக்கவுஞ் சானுமா மிருவருமே
              அருளிலா மிகக்கொடு வசனமொடே யணுகினர் தற்பர னருட்குருவே.

167.       முன்தினந் தீர்க்கனா மக்னிமுனி எலியா முனிந்தே யழித்ததேபோல்
              இந்தநா ளக்கினி வானிருந்தே யிறங்கியே யழிக்கவே யிவர்களையே
              மன்னவா கட்டளை யாமிடவே சித்தமே யுமக்குள தோவெனவே
              என்னஆ வியிதோ நீரறியீர் இதுவுமைப் பிடித்ததோ எனஅதட்டி.

168.       மன்னுயி ரழிக்கவே மனுமகனார் வரவிலை வந்தனர் ரட்சைசெய
              என்றுரைத் தகன்றன ரவ்வூரே பிரிதொரு வூருக் கேகினரே
              முன்னவ னவ்வழி செலும்பொழுதி லவர்முனால் வந்தொரு பாரகனே
              மன்னவா நீர்செலு மிடமெவணும் வருவனே பின்தொடர்ந் துமையென்றான்.