பக்கம் எண் :

திரு அவதாரம்219

 

359.       கெட்டவழி யிற்றனது சொத்தனைத்தும் கெட்டமகன் தூர்த்தடைந்தான் நல்குரவே
              கெட்டகாலத் தேயுதவா ராயினரே கெட்டவராந் தோழரேகை விட்டனரே
              பட்டகாலி லேபடுமே கெட்டகுடி யேகெடுமே யென்சொலும்ப ழஞ்சொலேபோல்
              கெட்டகால மேயிவனுக் கிப்பொழுதில் கேடுபஞ்சக் கட்டமுமே கூடினதே.

360.       பஞ்சத்தா லேநலிந்தான் பண்பிலானே மிகக்கட்ட மாயினன்கொ டும்பசியால்
              வஞ்சகச்சி நேகருக்குள் ளிம்மகனின் வதனத்தைப் பார்த்துதவ யாருமில்லை.
              அஞ்சியுமே சாவதற்க லைந்தனனே அவனுக்கொரு வேலையிட யாருமில்லை.
              மிஞ்சியபோ தோர்குடியா னோனிடமே மெலிந்தவன்சேர்ந் தொட்டியேகொண் டானவனை

361.       குடியானோ னோகொடுக்கும் வேலையிதோ வேலைகளில்மா குறைவாம் வேலையதாம்
              குடியானோன் பண்ணையிலே பன்றிகளை மேய்க்கிறிதாம் வேலையில் மர்ந்தனனே.
              குடிப்பதற்குக் கொஞ்சமேதான் கூழலாதே கூலியாய்க்கொடுத்ததோவே றேதுமில்லை
              குடிக்கிறகூழ் கண்டதில்லை தன்வயிற்றுக் கம்மகன டைந்தனன்கொ டும்பசியே.

362.       கொடும்பசியாற் றுன்படைந்த கெட்டமகன் குடற்கொதிப்புத் தாங்காதே தொய்ந்தனனே
              தடுப்பதற்காய் வேதையிதைப் பன்றிகள்தின் தவிட்டினாற்ப சியகற்றஆ சையுற்றான்
              கொடுப்பவரோ ஆருமிலர் இத்தவிடும் கொடும்வருத்தங் கொண்டனனே தன்மனதில்
              திடுமெனத்தன் புத்தியேதெ ளிவடைந்தான் உணர்ந்தனன்தன் துன்மதியைத் துக்கமானான்