பக்கம் எண் :

220

 

363.       என்னிலைமை யிப்படியு மாயினதே எவ்வளவோ நீசநிலை யிப்பொழுதில்
              என்தகப்பன் வீட்டினிலி ருந்ததென்னோ எவ்வளவோ சீர்சுகங்கள் யாவுமுள
              என்தகப்ப னூழியரோ எத்தனைபேர் திர்ப்தியாயா காரமேய வர்க்குளதே
              என்பசியைத் தீர்ப்பதற்கிங் காருமில்லை ஏழைபசி யாலிவணோ சாகிறேனே.

364.       இப்பொழுதே செய்குவனே யிவ்விதமே யேகுவேனே யெழுந்துடனே தந்தையிடம்
              இப்படியே செல்லுவேன்வெ றுத்தெனையே செல்லுவேனிக் கோலமாயே தந்தையிடம்
              அப்பாயான் பேர்மூடன் பாவியப ராதியேயும் முன்னுமேப ரன்முனுமே
              இப்பொழுதும் பிள்ளையில்ல பாத்திரனே வையுமுமதூ ழியனாயென் னையென்பேன்.

365.       தப்புவேனே தீங்கினின்று மிங்கிருந்தே தாமதஞ்செய் யாதெழுந்தே யோடுவேனே
              எப்படியுந் தந்தையரின் வீட்டினிலே யுள்ளதேய டைக்கலமு மென்றெழுந்தான்
              அப்படியெ ழுந்தனனே யங்கிருந்தே யாவலொடே சென்றனனக் கோலமாயே
             செப்பமாயே சேர்ந்தனன்தன் னூரருகே சென்றனன்தன் தந்தையகம் நோக்கியுமே.

366.       தந்தையுமே கண்டனனே தூரத்தில் தன்மகனே தன்னுருவே மாறிவர
              எந்தனுட மைந்தனோஇம் மானுடனே யெந்தவித மிக்கோல மாயினனோ
              என்தனகம் நீங்கியிவன் சென்றதாலிக் கோலமுமே யாயினை யோவெனவே
              சிந்தையுமே நொந்துருகி மைந்தனின்மேல் தீவிரமா யோடினனே மைந்தனிடம்.