பக்கம் எண் :

திரு அவதாரம்221

 

367.       அப்பாஎன் மைந்தனேயென் றோலமிட்டே ஆவியணைத் தேகழுத்தைக் கட்டியுமே
              அப்பாஇக் கோலமுமே யாயினையோ அல்லலேய டைந்தனையோ என்மகனே
              இப்பொழுதே வந்துசேர்வா யுன்னகமே யென்றுரைத்தே தன்மகனை முத்தினனே
              அப்பொழுதே மைந்தனுமே தான்வணங்கி நொந்தகம்நொருங் கியழுதானே.

368.       அப்பாயான் என்சொலுவேன் துன்மதியால் அன்புளபிதா வாம்உமக்கே யான்துரோகி
              அப்பாவும் மன்புசமூ கத்திலுமே அம்பரத்துக் குந்துரோகி பாவியேயான்
              அப்பாவும் மைந்தனெனச் சொல்லவேய பாத்திரனே யற்பநீசத் தோசியானேன்
              இப்பொழுதுள் ளம்முருகி மன்னியுமே யென்பிழைபொ றுத்தருள்வீர் என்றிரந்தான்

369.       திரும்பியுமே வந்தவனா மைந்தனையே தீவிரமா யிட்டகமே சேர்ந்தனனே
              விருப்பொடுமே யேவினன்தன் னூழியரை நீர்விரைந்தே வாசநீரால் நீராட்டுமே
              அருமையா முயர்ந்கவத்தி ரங்களாலு டுத்துமலங் காரமாயே கைவிரலில்
              பரிவொடுமே மோதிரமே யிட்டுமேநீர் பாதரட்சை யேதொடுப்பீர் கால்களிலே.

370.       மரித்துமேபோ னானெனது மைந்தனிவன் மாண்டவனே மாறியுயிர்த் தானிசமே
              மறுதரமுங் காண்கிறேனே யென்மகனை காணதே போனவனாம் மைந்தனிவன்
              விருந்தருந்தி யின்பமாய்க் களித்திருப்போம் பல்விதமா முண்டிகளே யாக்குவிரே
              அரும்பொருளாய்க் கொழுத்தவையே யாக்குமெனக் கொண்டனரா னந்தமுமே யாவருமே