பக்கம் எண் :

222

 

371.       காணவேகூ டாதிருந்த விம்மகனோ வந்தபோதோ காணவில்லை மூத்தமகன்
              நாணமுளோன் சேட்டமக னானவனோ பண்ணைவயல் பார்த்துவரப் போயிருந்தான்
              கோணாதே யேற்றபிதா நேயரொடே கூடியசந் தோடமாயி ருந்தனனே
              கானந்கள் பாடவேந டம்புரிய வாத்தியங்க ளோடவர்க ளித்திருந்தார்.

372.       பேதமிலாக் குற்றமிலா மூத்தவனோ பரிவுடன் னகம்வந்து சேரவுமே
              கீதவாத்தி யம்நடன இங்கிதத்தைக் கேட்கவேயோ ரூழியனைத் தானழைத்தே
              ஏதிவையே கீதவாத்தி யம்நடனம் ஏதுவிசே டம்மெனவி னாவினனே
              நாதனுமு ரைத்தனனே பவ்வியமாய் யாவையுமே தப்பாதே சேட்டனுக்கே.

373.       இன்றுமது சோதரனே வந்தனரே யின்பொடுமே யேற்றனரே யும்பிதாவே
              நன்றுசுகத் தோடவர்தி ரும்பியதால் நன்றுமகிழ் வாய்க்களிப்போ மென்றனரே
              கன்றதுகொ ழுத்ததாய டித்தனரே கனமகிழ்வ டைந்தனர வர்வரவால்
              இன்றிதோவிக் கீதவாத்தி யம்நடனம் யாவுமேயிக் காரணமே யென்றனனே.

374.       தமையனிதைக் கேட்கவும னம்வெறுத்தே செல்லவுளே சற்றெனும னமமிலானே
              அமைதியாய்வெ ளிப்புறமே நின்றனனே யகத்தினிலே மாசினமே கொண்டனனே
              இவையெலாம றிந்தவரா மூழியரே யிதையறிவித் தாருளேபோய்த் தந்தையார்க்கே
              அவையினின்றெ ழுந்தனன ருட்பிதாவே யவனிடமே வந்தனனே யாத்திமாய்.