375. அப்பாஎன் மைந்தனேயுள் ளேவராதே யப்புறமே நிற்கிறதோ நன்றலவே இப்பொழுதில் இம்மகிழ்ச்சி வேளையினில் நிற்கிறதேன் என்மகனே நீவெளியில் இப்பொழுதே யென்மகனே யென்னொடுவா ஏகமாய்ம கிழ்வடைவோ மென்றனனே அப்படியே யாவலா யழைத்திடினும் அம்மகனி ணங்கமன மற்றனனே. 376. ஈதுவரை எத்தனையோ ஆண்டுகளாய் ஈதுகாறு மூழியஞ்செய் தேனுமக்கே ஏதுமேயுங் கற்பனையே மீறியதும் ஏதுபிழை யேயிழைத்த தும்முளதோ ஏதுமேத காததுமே செய்ததில்லை உம்மைவிட் டெவ்விடமு மேகவில்லை ஏதுமொரே யாடெனக்குத் தந்ததுண்டோ நானுமென்தன் தோழரும கிழ்ந்திருக்க. 377. இப்பொழுதோ வந்தனனும் மிக்மகனே கேட்கமிக வெட்கமிவன் கெட்டகதை எப்பொழுதுந் துட்டனேய டங்காதோ னும்மைவிட் டெவ்விடமோ ஏகியவன் தப்பியேதி ரிந்தலைந்தும் உடைமையெலாந் தாசிவேசி யானவர்க்கி றைத்தவனே இப்படிபட் டோனிவனே வந்தவுடன் இன்னவனுக் காய்க்கொழுத்த கன்றடித்தீர் 378. என்னாளுஞ் சாந்தமுந்த யைநிறைந்த தந்தையரி ணக்கமாயே மைந்தனிடம் என்னாளு மென்னிடமி ருக்கிறாயே என்மகனே யென்னகுறை யுண்டுனக்கே என்னுடைய உடைமையெலாம் உன்தனதே யின்றனுப விக்கிறாயே யெப்பொழுதும் இன்னவனோ ரந்நியனோ என்மகனே யுன்னவனு முன்னுடன் பிறந்தவனே. 379. இவனுனது சோதரன்ம ரித்தனனே யிவனுயிர்த்தா னேதிரும்ப என்மகனே இவனலைந்தே காணாதே போயினனே யிவன்திரும்பத் தோன்றினனே யென்மகனே எவனெனிலு மிவ்விதமாங் காரணங்கொண் டினமொடும கிழ்வதேநியாய மாகும் இவனுக்காய் நாமகிழ வேண்டியதே யென்னொடுமே நீவருவாய் என்றனனே. |