111. உண்மையில்லாக்கணக்கன்லூக். 16 : 1 - 17 380. இம்மையில் வாழ்பவனா மோர்சிசியன் எவ்விதமந டந்துசொள வென்றுரைத்த உண்மையிலா உக்கிரான னின்றுவமை தஞ்சிசியர்க் கேயுரைத்தார் சற்குருவே நன்மைமிக வுள்ளதன வானொருவன் நன்செய்புன் செய்உடைமை யுள்ளவனே செம்மையாய்ப் பார்க்கவுமே தன்பொருளை சீரெனவோ ருக்கிராணன் வைத்தனனே. 381. உக்கிரமண னோவெசமா உடைமைகளை உண்மையிலா வழியிலழிக் கின்றெனன பக்குவமாய்ச் சொல்லஎச மானனுக்கே பார்த்தவரா மற்றவுட னூழியரே அக்கணமே யூழியனைத் தானழைத்தே உன்விடய மாய்வருமிச் செய்திவென்ன இக்கணமே யுன்கணக்கை யொப்புவிப்பாய் உக்கிராண னில்லையினி யென்றனனே. 382. இத்தீர்ப்பைக் கேட்டஅந்த வூழியனோ ஏங்கினனே யானினியென் செய்குவேனோ இத்தீர்ப்பால் வேலையிழந் தேனெளியேன் இல்லைபெலன் கொத்தியேபி ழைக்கவுமே இத்தீங்கிற் றப்புதற்காய் நான்குவீடே சென்றிரப்ப தென்கிலது வெட்சமாமே இத்தொழிலி லேபுகுதல் நன்றலவே யீதைவிட்டோர் காரியமே செய்குவனே. 383. என்தொழிலே போயினுந்தம் வீடுகளி லேற்றுமேகொள் வாரெனையுண் டாவதற்காய் இன்னதியான் செய்வதென்ற றிந்துளேனே யென்றெணியே யோர்முடிவே செய்தனனே தன்னெசமா னுக்குக்கடன் பட்டவரை யொவ்வொருவ னாயழைத்தே தன்னிடமே என்னெசமா னுக்குரிய உன்கடனே எவ்வளவென் றான்முதலில் வந்தவனை |