பக்கம் எண் :

திரு அவதாரம்225

 

384.       என்கடனோ நூறுகுட மெண்ணெயேதான் தீர்த்துவிடுவேன் சுருக்காய் என்றனனே
              உன்னுடசீட் டேயெடுத்தே யிங்கமர்ந்தே நீயெழுது வாயுடனே ஐம்பதென
              இன்னொருக டன்பட்டவன் வந்தவனை எவ்வளவோ உன்கடனே என்றனனே
              என்கடனோ நூறுகலங் கோதுமையே தீர்த்துவிடு வேன்சுருக்கமாய் என்றனனே.

385.       இதுகேட்டே யுக்கிராண னாமனுடன் எண்பதென்றுன் சீட்டிலெழு தென்றனனே
              அதுகண்டே எசமானன் நீதியிலா அப்பணியாள் புத்திமானென் றேபுகழ்ந்தான்
              இதுவிதமிப் பிரபஞ்சக் சந்ததியார் ஒளிமக்க ளெவரையுமே பார்க்கிலுமே
              அதிகபுத்தி மான்களாய்வி ளங்குகின்றார் அனனவர்தஞ் சொந்தமான சந்ததியில்.

386.       நித்தியத்துக் கும்முதவும் புத்தியைவி ளம்பிகிறேன் ஏற்றருளும் நேயமொடே
              நித்யநிலை யற்றதான விவ்வுலகை நீர்விடுத்தே யம்மையினுட் செல்கையில்
              நித்தியமாம் வீடுகளில் நேயமொடே யும்மையேற்றுக் கொள்ளுவாருண் டாவதற்காய்
              நித்தியத்தும் நிற்பவராம் நேயரைய நீதியாம்பொ ருட்களாற்சம் பாதியுமே.

387.       எவனொருவன் கொஞ்சத்தி லுண்மையுளோன் இருப்பனேய நேகத்தி லுண்மையாயே
              எவனொருவன் கொஞ்சத்தில் நீதியிலான் இருப்பனேய நேகத்தி லுண்மையின்றே
              எவனுமக்குள் நீதியிலா இவ்வுலகப் பொருளினிலே யுண்மையிலா தேயிருந்தால்
              எவருமையே நம்பியொப்பு விப்பாரோ என்றுமுள்ள மெய்ப்பொருளை யும்மிடமே.

388.       எவனுமக்கே யாதுசொந்த மாய்த்தருவான் இன்னொருவன் காரியத்திலுண் மையின்றேல்
              எவனுமொரு வூழியனாற் கூடியதோ செய்யவூழிய மீரெசமா னானருக்கே
              ஒருவனைநே சித்துமற்றோ னைப்பகைப்பான் பற்றியோர்வன் மற்றவனைச் சட்டைசெயான்
              ஒருவனாலுஞ் செய்யலாகர் துங்களுக்குள் ளூழியம்லோ கப்பொருட்குந் தேவனுக்கும்