389. அருட்குருவே யிவ்வுபதே சம்புரிய இடறினரே யருளிலாதோர் கேட்டிதையே பொருளிலாசை கொண்டபரி சேயர்மனம் புழுங்கியேப ரீகாசஞ் செய்தனரே திருக்குருதி ரும்பியேய வர்முகமாய் திடமொடுமே யவர்களைக்க டிந்தனரே அருளிலாரே நீதிமான்க ளாயுமையே மனுடரின்முன் காட்டுவீர் பத்தமேதான். 390. இருதயங்க ளேயறிவோர்மா தெய்வம் அறிந்திருக்கின் றார்நிசமே யும்மிதயம் அருவருப்பே தெய்வசமூ கத்தினிலே யபலமனு மக்களின்முன் மேன்மையுறல் அருளிலாரே யுங்களது நீதியேதான் அபலமனு மக்களின்முன் வீண்பகட்டே அருணிறைந்த தெய்வசமூ கத்தினிலே யருவருப்பே யும்முடைய நீதியுமே 391. அதுவரைவ ழங்கினதே சான்வரைக்கும் அருளியப்பிர மாணமுமே தரிசனங்கள் அதுமுதலே கூறிவரு கின்றனரே யருள்பரமன் ராச்சியச்சுவி சேடமாயே அதினுளேசெல் கின்றர்பல வந்தமாயே யதைப்பெறவே யாசையுளோர் யாவருமே இதேயெளிதே வான்புவியு மேயொழிதல் அவமுறாதே வேதவோரே ழுத்துறுப்பே. 112. செல்வந்தன் - லாசரு.லூக். 16 : 19 - 31. 392. பரன்குருப கர்ந்தனரே வேறுவமை பணப்பெருமை தீதெனவு ணர்த்துதற்காய் இரத்தினரத் தாம்பரமா மாடையணிந் தெத்தினமும் உல்லாசமாய் வாழ்ந்தவொரு பரமலுத்தன் சம்பனனுண் டேசுகிக்க படுத்திருந்தான் லாசரவன் வாசலண்டை பரமலுத்தன் சாப்பிடுமோர் மேசைநின் றேவிழுந்துணிக் கையாற்பசி தீர்க்கவெண்ணி |