393. தரித்திரனின் நிலைமைபரி தாபமிக தன்முகம்பார்த் தன்னமிட ஆருமில்லை பருக்களால்நி றைந்தவனே நேயரில்லை நாய்களவன் மேற்பருக்கள் நக்கினவே தரித்திரனின் நிலைமிகவுங் கேவலமே சம்பனன்வாழ் வோம்மிகவு முன்னதமே மரணத்தி லிவர்க்குளேவித் தியாசமுண்டோ மாண்டபினால் வித்தியாசம் மாபெரிதே. 394. மரித்தனனே தரித்திரனாம் லாசருவே மகிமையாஞ் சமாதியுண்டோ ஆருமில்லை மரித்தனனே தனவந்தனு மப்படியே மகிமையொடே கொண்டுபோனார் நேயரானோர் மரணத்தா லேயிழந்தான் தாரித்திரம் மனவருத்தந் துன்புமேநோய் தீங்கனைத்தும் மரணத்தா லேயிழந்தான் செல்வந்தன் உடைமையொடு சீர்சிறப்போ வாழ்வனைத்தும் 395. தரித்திரனம ரித்தவுடன் தெய்வதூதர் தாங்கியாப்ர காமடியிற் சேர்ந்தனரே மரித்தவுடன் சேர்ந்தனனே தனவந்தன் மாவேதை யுள்ளகெடு பாதலமே தரித்தினை யாபிரகா மின்மடியி லேயிருக்கக் கண்டனனே செல்வந்தன் வருத்தமுமே தானடையக் கட்டமுற்றோன் வாழ்வனுப வித்திருக்கக் கண்டனனே. 396. தனம்படைத்தோ னாபிரகாம் லாசருவைக் காணவுமே சத்தமிட்டே கெஞ்சினனே எனக்கிரங்கு மாபிரகாந் தந்தையரே யென்னிடம னும்புவீரே லாசருவை தனதுவிரல் நுனியினால்நீர் தோய்த்தெனது நாவுகுளிர்ந் தேயெனது தாகமற எனதுதுயர் மாகொடிதே யக்கியினில் எனக்கிரங்குந் தந்தையரே என்றிரந்தான். 397. மகனேநீ பூதலத்தில் வாழ்வடைந்தாய் வாழ்பொழுதெல் லாமடைந்தாய் நன்மைகளே மகனிவனாம் லாசருவோ அப்படியே வாழ்பொழுதெல்லா மடைந்தான் தீமைகளே செகத்தினிலே தன்னயமே கொண்டனுக்கே தேற்றரவு மிங்குளதோ வேதனையே செகத்தினிலே தேற்றரவே கண்டறியான் தேற்றரவ டைகிறனே யிவ்விடத்தில். |