398. இவ்விடத்தி னின்றெவனு மும்மிடமே தாண்டிவர இட்டமாயின் கூடியதில் அவ்விடத்தி னின்றெவனு மெம்மிடமே தாண்டிலர இட்டமாயின் ஆவதில்லை எவ்விடத்தும் நின்றெவனும் மற்றவிடம் தாண்டமுடி யாப்பிளப்பி ருக்கிறதே எவ்விதத்து மேமுடியாக் காரியமே யவ்விடமிருந் துசகிப்பாய் என்றாரே. 399. தந்தையரே யிந்நலமே செய்யுமெனக் கைந்துபேர்ச கோதரரே யுண்டுலகில் இந்தவிடம் வேதனையே யாந்தலமே யிங்கவரும் வந்துமேவே தைப்படாதே தந்தையரே வேண்டுகிறே னும்மையிதோ தண்ணளிகொண் டேயனுப்பும் லாசருசை தந்தைவீடே சென்றவவெனன சோதரர்க்கே சாட்சியாகச் சொல்லியதே டுப்பதற்காய். 400. மகனிதாகா அவர்களுக்கே மோசேமுதல் மற்றுளதீர்க் கத்தரிசி யாருமுளர் சுகமிகவே செவிகொடுத்தன் னோர்சொலுமாஞ் சொற்படிய வர்நடக்க என்றனனே தகப்பனேநீர் சொல்லுவது சத்தியமே மாண்டவனு யிர்த்தெழுந்தே சென்றாலோ அகமுவந்தன் னோன்சொலுக் கிணங்குவரே மாறுவார்ம னந்திரும்பி யென்றனனே. 401. அதுவுமாகா மகனிதோயான் சொல்வதேகேள் அவர்களிதோ மோசேமுனி தீர்க்கருட இதவுரைக்கே செவிகொடுக்கா தேயிருந்தால் அவர்பிழையோ மற்றெவர்க்கும் யிணங்காரே அதுவிதமே மரித்தவரி டத்திருந்தே அவணெவனும் போயினுமே நம்பமாட்டார் எதுவிதமு மிவணிருந்தே யாருமேகார் ஆவர்களுக்காய் நீயிரங்க வேண்டியதில். |