113. விசுவாச சக்தி.லூக். 17 : 5 - 6 வேறு 402. பன்னிரு சிசியரும் பரிவொடுமே பரன்குரு விடமே வணக்கமொடே மன்னவா எமதுட விசுவசமே வளரவே யருளுவீர் எனவுரைத்தார் முன்னவ னவர்களுக் கிரங்கியுமே முகமலர்ந் திசைத்தன ரிதுவசனம் சின்னதோர் விதையே கடுகளவு சிறுவிசு வசமே சிறப்புளதே 403. சிறுவிசு வசமே யுண்டெனிலோ செய்குவீர் மாபெரும் விடயங்களே தருபெரி தாமொரு அத்தியையே தருவே வேரொடும் பெயர்ந்து செல்வாயே விரிகடல் சென்றுமே யதனருவில் விரைந்துந டப்படு எனவுரைக்க தருவே கீழ்ப்படிந் தேயுமக்கே கணமதிற் சென்றவண் நடப்படுமே 114. புண்ணியமின்மை. லூக். 17 : 7 - 10 404. உங்களி லெவனுட வூழியனே உழுதுமேய்த் துமேமந் தைவயலில் அங்கிருந் தவனகந் திரும்பவுமே யவனுட எசமா னவனிடமே இங்குவருவாய் எனதுட ஊழியனே யிளைத்தே தவித்தே வருகிறாயே சங்கையாய்ப் புசிப்பாய் முன்னதாயென் றுரைப்பது முளதோ சாற்றுவீரே. 405. இப்பொழு ரெழுந்துநீ யென்னுணவை யினிதுறச் சமைப்பாய் துரிதமாயே ஒப்புற வொடும்யான் புசிக்கும்வரை பணிவிடை புரியுன தரைவரிந்தே அப்புற முனதட போசனமே யருந்துவாய் பருகுவாய் எனஎசமான் தப்பிலா துரைப்பா வைனுக்கவன் தவறா துழைப்பனே பணிவிடையான். 406. அப்படி யவனிடுங் கடமைகளா முனைத்தையு மூழியன் முடித்ததற்காய் ஒப்புற வொடுமெச மானவனுக் குவந்துப சாரமுஞ் செய்வதுண்டோ அப்படி நடப்பது முலகிலுண்டோ அதுவிதஞ் செய்வது மெவருமில்லை இப்படி யிதேபணி யனைநிகர இருக்கிறீ ரேயலாற் பிசகிலையே. 407. உங்களின் கடமைகள் பூரணமாய் முடித்ததாற் புண்ணிய மெதுமுளதோ உங்களுக் குரியவானக் கடமை யனைத்தை யுமுண்மை யாய்முடித்தே எங்களின் கடமைக ளேமுடித்தோம் எமக்கொரு மேன்மை இதிலிலையே இங்கபாத் திரரா மூழியர்யாம் அப்பிர யோசனர் எனநவில்க. |