115. லாசருவை யெழுப்புதல்யோ 11 : 1 - 46 408. கிருபைபெற் றுளதா மகமெனவும் கீதமே யெழும்புநல் லகமெனவும் பெருமையாம் பெயரே யடைந்ததாம் பெத்தனி யெனுமோர் பதியுளதே கிருபையே யமர்ந்ததா மகனெவும் கீதமே யெழும்புநல் லகமெனவும் பொருந்தியே யமைந்தவோ ரகத்தினிலே நொம்பலம் புகுந்ததே கொடும்பினியே 409. திருக்குரு சிசியருஞ் எருசலைக்கே செலும்பொழு துந்திரும் பும்பொழுதும் விருப்பொடு முப்சரி கிறவகமே விருந்தின ராயவ ரமருமகம் இருசசோ தரியாங் கிருந்தனரே மரியாம் மார்த்தா ளிவர்பெயரே ஒருசகோ தரனுமுண் டிவர்களுக்கே யுரியதோர் பெயரோ லாசருவாம். 410. நோயினில் வீழ்ந்தனன் லாசருவே நொம்ல மடைந்தா னிம்மனுடன் பாயினிற் படுத்தன னிம்மகனே பட்டதோர் வருத்தமும் மாகொடிதே தாயனப் பார்த்தனர் சகோதரியர் தந்தன் ரவிழ்தமே பலவிதமாய் நோயிதோ மீறிய தாலவதி நொம்பலம் நீங்கவே மார்க்கமில்லை. 411. மாயமா மிககொடும் நோயையுமே மாற்றவே மருந்தெது மில்லையதான் நேயமா யிவ்விரு வரும்நினைந்தார் நிர்மலன் திருப்பரி காரியையே தாயமாட் டேதுமே செய்யாதே தகுந்தவா ளனுப்பின ரவரிடமே நேயமாய் நீர்நே சிக்கிறவன் வியாதியாய்ப் படுத்தனன் என்றுரைக்க. 412. இந்தவோர் செய்தியைக் கேட்டவராம் யேசுவோ அவசரப் படவிலையே "இந்தவோர் நோயோ மரணத்துக் கேதுவாம் பிணியா யிருப்பதில்லை இந்தவோர் நோயால் தெய்வமுட மகத்துவம் விளங்கவே யெற்றதாமே இந்தவி யாதியால் தெய்வசுதன் தாமும் மகிமையே யடைவ" ரென்றார். 413. அன்பரோ மரியாம் மாதிடமும் அவள்சகோ தரிமார்த் தாவிடமும் இன்பொடுஞ் சோதரன் லாசரிடம் இணையிலா அன்புள ராயிருந்தும் அன்பனா மவன்பிணி யாயினனென் றறிந்துமே யத்தலம் நீங்காதே இன்னுமே யிருதினங் தங்கினரே அவர்தரித் திருந்ததாந் தலத்தினிலே. 414. இருதினஞ் செலவே பெத்தனிக்கே யேகவே குருபரன் மனதுவந்தார் இருவரு பேராஞ் சிசியருக்கே யிசைத்தனர் தமதுட மனவிருப்பம் மறுதரம் போவோம் யூததிசை எனதொடும் வருவீர் என்றனரே மறுத்துரைத் தனரே சீடருமே தடுக்கவே மறுதரஞ் செல்வதையே. |