512. மன்னுபொக்கி சங்குவிப்பாய் வானிலேயு னக்காயே பின்புவந்தே நீயெனக்குச் சீடனாகிப் பின்செல்வாய் மன்னனுடவார்த் தைகேட்கத் துக்கமானான் மாசெல்வன் பின்செலம னம்மிலாதே பின்னிடைந்தே போனானே. 513. தனத்தையே யிழந்துபோகச் சற்றுமன மற்றோனாய் மனமடிந்தே துக்கமாயே வாலிபன்பி ரிந்தேக இனமொடீதே கண்டநாதன் எங்குமேசூழ்ந் தேநிற்கும் சனங்களைத்தாஞ் சுற்றிநோக்கிச் சாற்றினாரே சீடர்க்கே. 514. எவருமேவான் ராச்சியத்துட் செல்கிறதோ லேசல்ல அவருமேசெல் வந்தராயின் அவர்செல்லுதல் மாகட்டம் அவர்மொழிந்த வார்த்தைகேட் டசீடராச்சர் யங்கொண்டார் பவமகற்ற வந்தவர்தாம் பகர்ந்தனர்மா வித்தாரம். 515. செல்வமேனம் பிக்கைவைத் தோர்தெய்வராச் சியத்துள்ளே செல்வதோம காவரிதாம் சிந்தனைசெய் வீரும்முள் செல்வனோவான் ராச்சியத்துட் செல்வதிலோ ரொட்டையே செல்வதோம காவெளிதாம் சீரொடூசிக் காதூடே. 516. அப்பனீதே வார்த்தைசொல்ல ஆச்சரிய மானாரே அப்படியா னால்விடயம் இட்சையோ லேசல்ல எப்படிரட் சையடைவான் எந்தமாந்த னானாலும் இப்படியு ரைக்காதே கூறினாரே சீடர்க்கே 517. ஏதுமேயி யற்றவேலா மாந்தராற்கூ டாதீதே ஏதுமாக்க வல்லராலி யற்றவேலா தோஏதே ஏதுமாக்கக் கூடுமன்றோ எலையில்லா வல்லோரால் ஏதுமேயி யற்றுவாரே யென்றுமுள்ள தெய்வந்தாம். 518. முன்னதாகப் பேசுவோனாம் பேதுரோமுன் னோனுக்கே மன்னவாயாம் விட்டியாவும் நாடியும்மைப் பின்சென்றோம் என்னவோகி டைக்குமெமக் கென்றுரைத்தா ரம்பித்தான் மன்னனோஅ வற்குரைத்தார் மாறுமொழி யாயீதே. |