பக்கம் எண் :

244

 

505.       எவனுமோர்குழந் தைபோலே யேற்கமன மற்றாலோ
              அவன்பரனின் ராச்சியத்துள் ளேசெலவே யாகாதே
              இவைசொலியே பாலரைத்தம் மார்பிலேந்தி யேசேர்த்தே
              அவர்சிறமேற் கையைவைத் தசீர்வதித்தே சென்றாரே.

123. சீவனைச்சுதந்தரிக்க என்னசெய்ய?
மத். 19 : 16 - 30; மாற். 10 : 17 - 31; லூக். 18 : 18 - 30.

506.       வழியிலேகும் போதுவந்தான் ஓர்தலைவ னேயங்கே
              தெளிவடைந்தோன் வேதவாக்கில் வேதபார கன்தேர்ந்தோன்
              எளியனல்லன் பார்பொருளில் மிக்கஆத்தி யுள்ளோனே
              தெளிவடைய வேண்டிவந்தான் சற்குருவை யேதேடி..

507.       காவலன்முன் னால்முழந்தா ளூன்றியேப ணிந்தானே
              ஆவலாயோர் கேள்விகேட்டான் அன்பராம்நம் ஆண்டாரை
              "மாவலராம் போதகார்நீர் நல்லவரே யோர்நித்திய
              சீவனேசு தந்தரிக்க என்னசெய்ய வேண்டும்யான்".

508.       நல்லனென்றே சொலஎன்னை ஞாயமென்ன சொல்வாயே
              நல்லவனே யாருமில்லை நல்லதெய்வ மல்லாதே
              சொல்லரிய சீவனைச்சு தந்தரிக்க ஆசித்தால்
              நல்லபரன் கற்பனையாம் வாக்கையே கைக்கொள்வாய்.

509.       தலைவனீவை யாதெனவே சற்குருமொ ழிந்தாரே
              கொலைவிபசா ரங்களவாங் குற்றமேதுஞ் செய்யாதே
              மலைந்துமேபொய்ச் சாட்சிசொல்லேல் வஞ்சமேநீ செய்யாயே
              அலைக்கழிவுண் டாக்குமேய கற்றுவாயித் தீங்கெல்லாம்.

510.       உன்தகப்பன் தாயையுமு வப்பொடுக னஞ்செய்வாய்
              உன்னைநீ நேசிப்பதே போல்பிறனை நேசிப்பாய்
              இன்னவைகொண் டேனெலாமே யென்னிளைமை கொண்டின்றும்
              இன்னுமேயென் னிற்குறைவே றென்னவென்றே சொல்வீரே.

511.       அன்னவன்மே லன்புகூர்ந்தே யன்பரேயு ரைத்தாரே
              இன்னமுன்னி டத்திலுண்டே யோர்குறைவே யேதென்றால்
              இன்னுமேநீ சற்குணனாய்ப் பூரணமே யாசித்தால்
              உன்னுடபொ ருட்களெல்லாம் விற்றுவறியர்க் களிப்பாயே.