பக்கம் எண் :

திரு அவதாரம்243

 

498.       தள்ளிவிட்டே வேறுமனஞ் செய்யவிப சாரன்தான்
              தள்ளிவிடப் பட்டவளைச் செய்யவிப சாரன்தான்
              தள்ளிவிட்டே வேறுமனஞ் செய்யவிப சாரிதான்
              தள்ளிவிட லெப்பிதத்தும் தப்பிதந்தான் நன்றல்ல.

499.       குருபரன்தம் வீடுசேர கூடிவந்தே சீடர்கள்
              புருடனின்கார் யம்மனையா லிப்படிப்பு கல்இன்றேல்
              ஒருவனும் ணத்தலேநன் றல்லவென்று ரைத்தாரே
              திருக்குருவுத் தாரமாயே செப்பினாரீ தேவார்த்தை.

500.       எவனுமோர்வ னிந்தவாக்கை யேற்கவேகூ டாதன்றோ
              எவனுமேவ ரம்படைத்தோன் இதையேற்றுக் கொள்வானே
              அவனிதன்னி லுண்டண்ணகர் தாயிடம்பி றந்தோரே
              அவனிதன்னி லண்ணகரா யாக்கினோரு முண்டன்றோ!

501.       பரமராச்சி யத்திலுள்ள பாக்கியநி மித்தந்தான்
              விரதமாயே யாக்கினோராம் வேறுமாந்த ரும்முண்டே
              அறமெனவே யேற்கவேலா தேயநேகம பேராலே
              திறமொடுநா மேற்கவல்லோர் யேற்கத்திட மாயஃதை.

122. பாலரை யாசீர்வதித்தல்.
மத். 19 : 13 - 15; மாற். 10 : 13 - 15; லூக். 18 : 15 - 17.

502.       அத்தருணங் கொண்டுவந்தார் அத்தனண்டை பாலர்களை
              கித்தமுவந் தேகரத்தாற் றொட்டுமேசெ பஞ்செய்ய
              அத்தனண்டை வந்தரைய தட்டினாரே சீடர்கள்
              அத்தனோவ ருத்தமுற்றச் சீடரைக்க டிந்தாரே.

503.       பத்தரேத டுத்ததென்னோ வந்தபால ரென்னண்டை
              பத்தமோஎன் பேரிற்பரி தாபமேநீர் கெரண்டீரோ
              சித்தமெனக் கில்லையென்றோ சீறியேத டுத்தீரோ
              இத்தரையிற் பாலரையி ழிந்தரென்றெண் ணங்கொண்டோ.

504.       என்னண்டை பாலர்வர யென்றுமேயிட மேதாரும்
              என்னிடஞ்சேர் வோர்க்கிடையூ றேபுரியா தீரேநீர்
              அன்னவர்க்குச் சொந்தமன்றோ வான்பரம அம்ராச்சியம்
              என்னிடமே கொண்டுவாரு மிச்சிறுபா லர்தம்மை.