491. விண்ணைநோக்கிப் பார்க்கவேமனத் துணிவில்லா தோனாக தன்மாரில டித்துமேத லைகுனிந்தே நின்றானே தன்பவமு ணர்ந்துமேத யங்கிநீச னாம்பாவி என்தனின்மேற் கிருபைவைப் பீர்ஏந்தலே யென்றானே. 492. தனைநீதி மானனென்றோன் நீதியில்லா னேதானே தனையேதான் தாழ்த்தினவனோ நீதிமானே ஆவானே தனையேயு யர்த்தினவனோ தாழ்வடைவனே மெய்யாயே தனையேதான் தாழ்த்துகின்றோன் தாழ்வதில்லு யர்வானே. 121. விவாகபந்தன நிவிர்த்தி.மத். 19 : 3 - 12; மாற். 10 : 2 - 12. 493. தருணமொன்றிற் பரிசெயாரே சற்குருவைச் சோதிக்க மறுவிலானை கேட்டனரே வஞ்சகமா யோர்கேள்வி மரணமேபி ரிப்பதற்குள் மானுடன்தன் பெண்டீரை பிரித்துநீக்கல் நியாயமாமோ பேதமின்றே சொல்வீரே. 494. ஆதிகார ணன்படைத்தார் ஆதியிற்றான் மாந்தர்கள் ஆதிநாளி லாடவன்பெண் ணாகரண்டே பேரைத்தான் ஆதலினா லாடவன்தன் தந்தைதா யகம்நீங்கி காதலியோ டொன்றெனக்க னிந்திசைவான் என்றாரே. 495. மனைகணவ னென்றிவர்கள் இரண்டுமக்க ளானாலும் இனைந்தனரே மாம்சமொன்றே இரண்டுபேரா யேயல்ல இணைந்தரான ரண்டுபேரை யென்றுமேயுள் தெய்வத்தால் இணைத்ததைப்பி ரிக்கலாகா தெந்தமாந்த னானாலும் 496. அப்படியே தள்ளலாமே தள்ளுதற்சீட் டாலென்றே எப்படிக்கொ டுத்தரோவிக் கட்டளையை மோசேயே அப்படியாங் கட்டளையைத் தந்தகார ணம்மீதே ஒப்புவீரே காரணந்தான் உம்முளக்க டீனந்தான். 497. ஆதிநாள்மு தற்றோடங்கி யப்படியுண் டோவல்ல வேதியன்மோ சேமுனிவே கங்கொடுத்த நாட்கொண்டே வேசியான தாலலாதே வேறுகார ணத்தாலே ஆசைமனை யாளினையே தள்ளவேகூ டாதென்றும். |