484. நாடிநித்தம் வேண்டுகின்ற நல்லரீவர் காரியத்தில் நீடியபொ றுமையுள்ளோர் நீதிசெய்ய மாட்டாரோ வாடியேநீர் சோர்வுறாதீர் வான்பரனே யாம்வள்ளல் நீடியகிரு பையுள்ளோர் நீதிசீக்கி ரஞ்செய்வார். 485. நன்றுநானு ரைப்பதையே நம்புவீர்சத் யந்தானே என்றுமேசெ பித்திருமின் சோர்ந்திளைத்தே போகாதே பொன்றிடாவிசு வாசமொடும் ஆயினும்பூ லோகத்தில் நன்றுமைந்தன் காண்பரோவிசு வாசமேவ ரும்நாளில். 120. பரிசேயன், ஆயக்காரன் விண்ணப்பம் லூக். 18 : 9 - 14 486. அகத்தினிற்பே தம்முளோரா மீர்வருப மானத்தால் அகத்தினிற்றாழ் மையுளோரை யற்பமாய்ம தித்தோராய் அகத்தினிற்றாம புண்யரென்றே யெண்ணகந்தை யுள்ளோரை அகத்தினினா ழங்களேகாண் ஆண்டவர்க டிந்தாரே 487. இருநரர்வேண் டல்செயவே யேகினார்தெய் வாலயம் ஒருநரன்பரி சேயனாவான் ஓர்வனாயக் காரன்தான் ஒருநரனோ மாதுணிவா யுட்பிரக ரஞ்சென்றே இருகரங்க ளேயுயர்த்தி யேறெடுத்தே தன்கண்கள். 488. தெய்வமேயு மக்கியான்செ லுத்துகின்றேன் மாதோத்திரம் தெய்வமேயு மக்கடாத செய்ததில்லை யெக்காலும் மெய்யேபறி காரர்விப் சாரரையே போலல்ல பொய்யரேய நீதிராயக் காரனீவன் போலல்ல. 489. செய்யவேற்பட் டுள்ளவெல்லாஞ் செய்கிறேனே மாதிட்டம் மெய்யேயான் வாரமீர்நா ளுபவாசிக் கின்றேனே செய்கிறேனே பத்திலொன்றே தேடுமெச்சம் பாத்யத்தில் தெய்வமேதோத் ரம்முமக்கே யென்றுவேண்டல் செய்தானே. 490. கள்ளனற்ப னாகவேக ழித்தவாயக் காரன்தன் உள்ளதன்மை தானறிந்தே யுள்ளமேயு டைந்தோனாய் மெள்ளமெள்ள வந்திவனோ ஆலயப்பு றம்நின்றே உள்ளேசெல் வேதுணியா துட்கிநின்றான் தூரத்தில். |