பக்கம் எண் :

240

 

477.       பட்டணமொன் றுண்டதனிற் பட்சபாத முள்ளோனாம்
              சட்டமேய சட்டைசெய்வோன் மக்களைம திக்காதோன்
              திட்டமாயெ வர்பணியுந் தெய்வமுமஞ் சாதோனே
              நிட்டூரனே யானவன்தான் நியாயபதி யானானே.

478.       பதியிலாதா ளாமொருவி பட்டணத்தி லேயுண்டே
              கதியிலாள்தன் காரியங்கள் காக்கவேயா ளில்லாளே
              பதியிலுள்ள எதிரியோடுள் தன்வழக்கை யேபார்க்க
              அதிபனண்டை சென்றவனை நீதிசெய்யக் கேட்டாளே.

479.       ஈவிரக்க மற்றவளே யீரமில்லா னேயீவன்
              கூவிநிற்கு மேழைகளில் கூக்குரலைக்கேட்பானோ
              பாவியீவள் ஏழையீவள் மேற்பரிதா பித்தானோ
              ஆவிபோகக் கத்தினாள சட்டையாயி ருந்தானே.

480.       தினந்தினமும் வந்துதெரி வித்துமேவ ழக்கீதை
              குணமிலாவிக் கெட்டவன்தான் கொஞ்சமுமேற் றானில்லை
              குணமிலானெ ரிந்துவீழ்ந்தே கோபமாக வேபேச
              மனம்வருந்தி நொந்துமனஞ் சோர்ந்துபோக வேயில்லை.

481.       அனுதினமும் வந்துமேய லட்டியேநின் றாளீவள்
              அணுவளவி டங்கொடான லட்டுதற்பொ றுக்காதே
              மனுடரைம தித்திலேன்யான் மாகடவுட் கஞ்சேனே
              அனுதினமின் னாளெனைய லட்டியேநிற் கின்றாளே.

482.       கனவிலும் லட்டுவாள்கண் தூக்கமுமு லைந்தோட
              மனவமைதி கெட்டழிய வாதையுந்தா னீங்காதே
              மனமொடிந்த ஏழையின்வ ழக்கையான்வி சாரிப்பேன்
              தினமுமேதொலை செயாதிருக்க நீதியேசெய் வேனென்றான்.

483.       சிந்தியும்ம நீதியுள்ள நீதிபனின் வாக்கீதே
              அந்தமாதி யேயிலோரே அம்பரன்தாம் காருண்யர்
              சொந்தமாய்த்தெ ரிந்துகொண்ட சொந்தசன மானோரே
              சந்ததமும் ராப்பகலாய்த் தம்மைநோக்கிக் கூப்பிட்டால்.