470. நீதனாம்லோத் நாட்களில்ந டந்தநேர்மை யேபோலே நாதன்மனு மைந்தனாண டக்குமேயவ் வண்ணந்தான் நீதனேசோ தோமினின்றே நீங்குமட்டு மங்குள்ளோர் பேதமின்றுண் டேசுகித்தார் பெண்கொடுத்துங் கொண்டாரே. 471. மாளிகைகள் கட்டினாரே நட்டுவிற்றார் கொண்டாரே கேளிக்கையா யேயிருக்க கேடுநாணெ ருங்கிற்றே நாளிலக்னிக் கந்தகமே வானிருந்தே வர்சிக்க பாழழிவெல் லாவுயிர்க்கும் வந்துபட்ப மானாரே. 472. அந்தநாட்டன் வீடுமேலே தங்கியேயி ருப்போனே அந்தவீட்டிற் பண்டமேமெ டுக்கவுள்ளி றங்காதே அந்தவண்ண மங்கிருந்த கன்றுமேசெல் வானாக இந்தவண்ணங் காட்டிலுள்ளோள் ஏகுகபின் பாராதே. 473. சீவனையி ழந்தலோத்தின் பெண்டிரைச்சந் திப்பீரே சீவனாயே யெண்ணியாஸ்தி சீவனேயி ழந்தானே சீவனைரட் சிக்கவெண்ணில் சீவனேயி ழப்பானே சீவனையி ழப்பவன்தன் சீவனையு யிர்ப்பானே. 474. ஈர்வரோர்ப டுக்கையிலிவ் ராவிலேநித் திரைசெய்ய ஓர்வனேற்கப் பட்டனனே யோர்வனோவி டப்பட்டான் ஈர்வரொன்றா யேந்திரந்தி ரித்துமேயி ருப்பாரே ஓர்வியேற்கப் பட்டனளே ஓர்வியோவிடப் பட்டாளே. 475. ஈர்வரில்வ யலில்நின்றோர் ஓர்வனேற்கப் பட்டானே ஓர்வனோவி டப்படுவா னென்றுமக்கு றைக்கின்றேன் ஓர்பரனே எங்கேயென் றேயுரைப்பீர் என்றாரே கூர்மையாங் கழுகேசே ரும்சிதைஎவண் அங்கென்றார். 119. சோர்ந்து போகா செபம்.லூக். 18 : 1 - 8. 476. சித்தசுத்தி செய்துகொண்டே சித்தமோர்மு கஞ்செய்தே சித்தமென்றுஞ் சோர்வுறாதே சுத்தசெபஞ் செய்தற்காய் நித்தமுங்கொள் வாஞ்சையால் நெகிழவேலி டாதோராய் பத்தமாய்செ பிக்குமாண்போ ருவமையாற்ப கர்ந்தாரே. |