118. பரலோக ராச்சியம் எப்போவரும்.லூக் 17 : 20 - 37. 463. வந்திருந்தோர் பரிசயாரே வந்துகேட்டா ரோர்கேள்வி எந்தவேளை தெய்வராச்சியம் தோன்றுமோஇங் கேவந்தே உந்தமின்சித் தம்முவந்தே நீருரைப்பீர் என்றாரே இந்தவார்த்தை கேட்டிசைத்தார் யேசுவோஅன் னோருக்கே. 464. வந்துறுமே வானராச்சியம் ப்ரத்தியட்ச மாய்த்தோன்றா இந்தஇங்கே அந்தஅங்கே யென்றிசைக்கக் கூடாதே விந்தையந்த ராச்சியத்தை வேறெவணும் நோக்காதீர் இந்தஇங்கி ருக்கிறதே உங்களுக்குள் என்றாரே. 465. காவலன்சீ டர்க்குரைத்தார் மாகனிவோ டிவ்வார்த்தை மாவலர்மா னுடமைந்தன் நாட்களிலொன் றேயொன்றை ஆவலாய்நீர் காணவென்றே ஆசைகொள்ளும் நாட்டோன்றும் ஆவலோடே காத்திருந்தும் அஃதையோ காணாரே. 466. என்னநாளில் வந்தெவரோ சொல்லிலிங்கே யங்கென்றே பின்னவேத மாய்ச்சொலாதீர் பின்செலவே வேண்டாமே மன்னுமனு மைந்தனேதாந் தோன்றுவாரே தம்நாளில் மின்னலேயோர் திக்கெழுந்தே மின்னுமாப்போல் நேர்திக்கில். 467. அந்தநாணெ ருங்குமுன்னர் அம்மனுட மைந்தன்தாம் இந்தசாதித் தீயராலே எத்தனைபா டோபட்டே இந்தசாதி யாராலா காரெனத்தள் ளப்பட்டே நிந்தையீதெல் லாமவர்க்கே நேரவேண்டு மேயன்றோ. 468. நீதனோவை மாமுனிவன் நாணடந்த நேர்மையாய் நாதன்மனு மைந்தனுட நாட்களில்ந டக்குந்தான் நீதனன்னோன் பேதையுட்போ மட்டுமேயக் காலத்தோர் பேதமின்றுண் டேசுகித்தே பெண்கொடுத்துங் கொண்டாரே. 469. மாளிகைகள் கட்டினாரே நட்டுவிற்றே கொண்டாரே கேளிக்கையா யேயிருக்கக் கேடுநாணெ ருங்கிற்றே நாளிகைய றியாவேளை நாடுநகர் காடெல்லாம் ஊழிகால வெள்ளமேவந் தேயொழிந்தார் யாபேரும். |