| 456. நாக்கினின்றிவ் வாக்கெழும்பக் குட்டராம்ந லிந்தோரே வாக்கைநம்பி நீங்கினாரே சாலெமாம்ந கர்நோக்கி வாக்குமேப லித்ததன்றோ அன்னவர்வ ழிச்செல்ல நோக்கியறிந் தாருடல்கள் சுத்தமாக நோய்நீங்கி 457. சுத்தமான பத்துமாந்தர் துன்பகன்றே யின்புற்றார் அத்தனாலே பத்துமாந்தர் அங்கசொத்தம் பெற்றாலும் பத்திவர்க்குள் ளொன்றுநீங்க பத்தமற்றோ ரானாரே சுத்தமான ஒன்பதின்மர் சொற்பநன்றி யற்றாரே. 458. சுத்தமுற்ற மற்றவன்சு கந்தநன்றி யுள்ளோனே அத்தனால் டைந்தநன்மை யார்வமாய்ம தித்தானே சத்தமட்டே தோத்தரித்தான் சர்வவல்ல தெய்வத்தை பத்தமாய்த்தி ரும்பிவந்தான் பக்தரைக்காப் போரண்டை 459. சற்குருதம் பாதமேசாட் டாங்கதெண்ட னிட்டானே நற்பரம வைத்யனைத்தன் னாவினாற்று தித்தானே அற்பனாமே னக்கிரங்கி அற்புதநன் றீய்ந்திரே எப்படியா னிந்தநன்மைக் கீடுசெய்வேன் என்றானே, 460. என்னவிந்தை யிம்மனுடன் ஏழையோர்ச மாரித்தன் அன்னவனை யாண்டவர்பார்த் தாச்சரியங் கொண்டாரே உன்னதராம் வான்பரனுக் கோர்கனஞ்செ லுத்தற்காய் அந்நியனா மீவனல்லால் ஆருமேவந் தாரில்லை. 461. உத்தமமாஞ் சுத்தமுற்ற ஒன்பதுபே ரெங்கேயோ பத்தனேய டைந்தனையே பாக்கியம்நீ பெற்றாயே உத்தமமாம் விசுவசந்தா னுன்தனைக்காப் பாற்றிற்றே பத்தனேநீ யுன்வழிசெல் பண்புசமா தானமாய். 462. அப்பனேயெப் போதுமேயா னும்மடிமை யாய்த்தந்தேன் இப்படியே யும்பினாலெப் போதுமேசெல் வேனென்றான் அப்பனன்னோ னுக்குரைத்தார் அர்ச்சகர்க்குன் னைக்காண்பி அப்புறம்வா என்றுசொல்ல அப்படியே செய்தானே. |