பக்கம் எண் :

236

 

449.       மரித்தவனாம் லாசரைத்தம் வன்மையாலெ ழச்செய்தே
              மரியாமார்த் தாளுமேதம் மாதுயரம் நீங்கத்தான்
              பிரிதவணுள் ளிட்டசன்ம் பெந்துகள்வி யக்கத்தான்
              சிறிதுகால மங்குதங்கி சேர்ந்தனரெப் ராயீமே.

450.       சென்றுபோன ஊரெவணுஞ் சீர்சுகம ளித்தாரே
              நன்றுவான ராச்யசெய்தி நாடெலாம்ந வின்றாரே
              குன்றாதுசீ டாநம்பகம் கிரூவுபதே சஞ்செய்தே
              வென்றியாயே சுற்றிவந்தார் வேதமூர்த்தி யானோரே.

451.       இந்தலோகம் வந்தநோக்கம் எந்தநாள்மு டிந்தேபோம்
              அந்தநாளெ ருங்கவேதான் ஆண்டவர்பு றப்பட்டே
              சந்தமாய்ச்ச மாரியாக்க லிலேயாநாட் டின்மார்க்கம்
              அந்தமார்சா லேமைநோக்கி ஆண்டவர்ந டந்தாரே.

452.       வந்தனரோர் கிராமமுள்ளே மானுடர்மே லன்புள்ளோர்
              வந்தனர வர்க்கெதிரே வாதைகொண் டபத்துப்பேர்
              அந்தமக்க ளாம்பதீன்மர் அந்தமற்றோர் குட்டத்தால்
              நொந்தவிந்த மக்களேவந் தாரசுத்த நோய்நீங்க.

453.       கெட்டஇந்த ரோகிகள்தாங் கிட்டிவர லாகாதே
              சட்டமுண்டே திட்டமாயே சாத்திரச்ச டங்கேபோல்
              கிட்டவாரா தெட்டநின்றே கிறித்துவுக்கு நேராயே
              நட்டமாயே நின்றுகொண்டே நாதனைவேண் டிச்சொன்னார்

454.       எங்க்ளின்நிர்ப் பந்தமேபார்த் தெங்களின்வேண் டல்கேட்டே
              எங்களுக்கி ரங்குவீரே யேசுஐய்ய ரேயென்றார்
              துங்கனாங்கி றித்தியேசே துன்பமாற்ற வல்லோரே
              பங்கமுற்றோ ராமிவரைப் பார்த்திரக்கங் கொண்டாரே.

455.       உங்களின்நிர்ப் பந்தமேகண் டுங்களின்வேண் டல்கேட்டேன்
              தங்கவேண்டாம் செல்லுவீரே சாலெமாம்ந கர்நோக்கி
              அங்கமர்தெய் வாலயத்தின் அர்ச்சகருக் கும்மைத்தாம்
              சங்கையாய்க் காண்பியும்நீர் சாத்திரம்போல் என்றாரே.