பக்கம் எண் :

திரு அவதாரம்235

 

116. காய்பா சனதரீம் சதி. யோ. 11 : 47 - 54
வேறு
 

442.       அவர்களும் பெரியோ ருந்தாம் அவைகளைக் கேட்டே யப்போ
              அவசர மாயே கூட்டி சனதரீ மாஞ்சங் கத்தை
              இவன்பல புதுமை செய்ய இதற்கியா மென்செய் வோமோ
              இவனையிப் படியே விட்டால் இவனையெல் லோரும் நம்பும்.

443.       கவலையற் றிருந்தோ மாகில் கெடுதியாய் முடியுங் காரியம்
              இவன்பினே செலுவா ரன்றோ இவணுள மக்களெல் லோரும்
              இவன்பினே கலகம் மானால் அறிந்திதை வருவார் ரோமர்
              எவரையு மழிப்பா ரன்னோர் அழிப்பரிந் நகருந் தானே.

444.       இங்கிதற் கென்னோ யுக்தி சொல்லுவீ ரென்றே கேட்டார்
              அங்கிருந் தோருள் ளோர்வன் பிரதா னீயவ் வாண்டில்
              சங்கையுள் ளோனாச் சார்யன் காய்பா என்போன் தானே
              அங்கிருந் தோரைப் பார்த்தே யரைந்தன னொன்றே யுக்தி.

445.       இனமொடு சொல்கின் றேனே யேதுமே யறிந்த ரில்லை
              சனங்களெல் லாருங் கெட்டே சாகா தொருமாந் தன்தான்
              சனங்களுக் காகச் சாதல் சாலவும் நலமா மென்றே
              மனதிலெண் ணாதே போனீர் நாடுவீர் மதியே யென்றான்.

446.       சொந்தமா யீதே வார்த்தை சொல்லின னெனலா காதே
              அந்தவாண் டாச்சாரீயன் பெரியவ னிவனே யஃதால்
              இந்தநம் யூதர்க் காக யெசும ரிப்பா ரென்றும்
              இந்தயூ தர்க்காய் மாத்திர மல்லவே சிதறுண் டோராம்.

447.       தெய்வமக் கள்யா பேரைச் சேர்த்துமே ஒன்ற்ாய்க் கூட்ட
              தெய்வகு மாரன் தம்மை தியாகமே செய்வா ரென்றும்
              மெய்த்தரி சனமாய்த் தானே செப்பினன் மெய்யே மெய்யே
              ஐய்யனை யந்நாட் கொண்டே அவர்யோ சித்தார் கொல்ல.

448.       யோசனை யறிந்தே நாதன் யூதருக் குட்டங் காதே
              யேசதே யிடமே விட்டே யேகிவ னாந்தரத் தோரம்
              வாசமே செய்யப் போனார் வாழெபி ராயீ மூரே
              சீசரோ டேசேர்ந் தாரே தங்கினார் சின்னா ளங்கே.