435. ஐயோ அன்புள ஆண்டவரே யெடுத்தா லவணே நாறுமன்றோ மெய்யே நான்குநா ளாயினதே நீவிரெ டாதீர் எனமார்த்தாள் தெய்வம கத்துவங் காண்பாய்நீ திடவிசு வாசமு னக்கிருந்தால் தையலே யுனக்கியான் முன்னுரைத்தேன் தயிரிய மாயிரு என்றுரைத்தார். 436. கல்லறை மூடுசல் லெடுத்துவிட காவல னவர்களுக் குறைத்தபடி கல்லறை வாயினி லிருந்ததொரு கல்லையே யகற்றிப் போட்டனரே கல்லறை திறக்கவே லாசருட பிரேதமே கண்டனர் யாவருமே வல்லவர் கண்களை யேறெடுத்தே வான்பிதா வைத்துதித் தேசெபித்தார். 437. எனதுபி தாவுமைத் துதிக்கிறேனே யெனக்குநீர் செவிகொடுத் தீரதனால் எனக்குநீர் செவிகொடுக் கிறீரென்றும் எனஅறிந் திருக்கிறேன் நிசநிசமே எனதுட நிமித்தம் அல்லஅல்ல சூழ்ந்தெனை நிற்கிற சனநிமித்தம் எனையிவ ணனுப்பினீ ரெனவிலரே விசுவசிப் பதற்கா யிதைவுரைத்தேன். 438. தெளிவொடு மிவ்வுரை யிசைத்தபினால் திருமகன் கல்லறை நோக்கியுமே 'வெளியே லாசரே வா'வெனவே வெற்றியாய் மாபெருஞ் சத்தமாயே வெளியே வந்தன னச்சணமே வீய்ந்துபோ னவனாம் லாசருவே தெளிவுறக் கண்டன ரவணுளோரே மாதிரள் கூட்டமாம் யாவருமே. 439. கட்டியே யிருந்தன அவன்கரங்கள் சடலமும் பிரேதத் துணிகளினால் சுற்றியே யிருந்ததே யவன்முகமும் கிரசையே சுற்றிய துணியினாலே கட்டவிழ்த் தேவிடும் எனவுரைக்கக் கருணையனண் டையில் நின்றவரொ கட்டையே யவிழ்த்தே விடவவரே அவணுளேர் கண்டதி சயித்தனரே. 440. கண்டனர் மார்த்தா மரியாளும் ஆதலின் கனமகிழ் வடைந்தனரே அண்டையில் நின்றவன் லாசரிடம் வந்தவற் கீய்ந்தனர் முத்தமிடவே ஆண்டவர் பாதம் பணிந்தனரே மாமகிழ் வடைந்தார் மூவருமே ஆண்டவர் யேசுவைத் தோத்தரித்தார் கண்ணீ ருகுத்தா ரானந்தமாய் 441. மரியா ளிடம் வந் திருந்தவராம் மகத்துவ மாசெயல் கண்டவரே பரிவா ரமேயவ் யூதருளே பலர்விசு வாசமே கொண்டனரே பரிவாய் வந்திருந் தோர்சிலபேர் பரிசய ரிடம்போய்ச் சொல்லினரே கிறித்துவாஞ் யேசுவே செய்ததாமிக் கிரியை செப்பினர் விவரமாயே. |