பக்கம் எண் :

திரு அவதாரம்233

 

428.       இவைகளைச் செப்பியே மார்த்தாளே யெழுந்துமே தனதக மேகினளே
              அவள்சகோ தரியா மரியாமை யழைத்துமே ரகசிய மாய்த்தனியே
              உவப்பொடு போதகர் வந்துளரே யுனையழைக் கிறாரே யென்றனளே
              அவசர மாயெழுந் தக்கணம் அவரிடம் விரைந்தன ளாத்திரமாய்.

429.       இன்னுமே யங்கிருந் தேசுபரன் ஏகா திருந்தன ரூரினுளே
              தன்னிடம் மார்த்தாள் வந்துபார்த்த தானமே சீடரோ டேயிருந்தார்
              மன்னுமா குருவையே பார்ப்பதற்கா யாத்திர மாயிவள் செலலவுமே
              அன்னவள் பின்பலர் சென்றனரே யங்கா றுதல்சொல வந்திருந்தோர்.

430.       அவளொடு மவனகத் திருந்தவரே யவளுக் காறுதல் சொல்லவந்தோர்
              அவனவ சரமாய்க் கல்லறைக்கே யழவே போகிறா ளெனநினைந்தே
              அவளவண் தனிமையாய்ச் செலவிடுதல் அநுசித மானதே யெனநினைந்தே
              அவர்தொடர்ந் தனரே யவள்பிறகே யடைந்தனர் யாவரும் ஆண்டவரை.

431.       வந்தன ரருட்குரு விருந்தவிடம் வந்தவ ளவரையே தரிசிக்கவே
              சிந்தையிற் கலங்கியே விழுந்தனளே சீரியர் சீர்பத மலரடியில்
              'இந்தவி டமேநீ ரிருந்தீரேல் என்சகோ தரன்மரி யா' னெனவே
              சிந்தையே கலங்கவே யவணுளோரே தேம்பியே யழுதுகண் ணீருகுத்தாள்.

432.       அவளழு தனளவ ளொடுமவணே வந்தவர் யூதரு மழுதனரே
              அவரெலா மழவே திருப்பரனும் ஆவியிற் கலங்கியே துயரடைந்தே
              அவனை வைத்தமிட மெவ'ணெனவே ஆண்டவா வந்துபார்ப்பீ ரெனவே
              இவைகளே செவியுற இறைவனுமே யுள்ளமு ருகிக்கண் ணீருகுத்தார்.

433.       இதோஇவ ரவனிடம் எவ்வளவாய் நேசமா யிருந்தார் எனயூதர்
              இதோஇவர் குருடனின் கண்களையே திறந்தவ ராம்வல தரிசியரே
              இதோஎது மியற்றவே கூடியவர் மாண்டவ னிவன்மரி யாதிருக்க
              இதோஇது செயவே லாதவரோ என்றுமே பகர்ந்தனர் வேறுசிலர்.

434.       நல்லவர் நம்பரன் நற்குருவே தம்முளே கலங்கினர் மறுபடியும்
              கல்லறை யண்டைவந் தார்பரனே கல்லறை யவணுள தொருகுகையே
              கல்லறை வாயினில் வைத்துளதே யடைத்துமே யதனையோர் பெருங்கல்லே
              கல்லறை மூடுகல் எடுத்துவிடும் என்றுகட் டளையிட் டார்பரனே.